[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 03:05.33 AM GMT ]
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கடலுக்கு அடியிலான 285 கிலோமீற்றர் மின்சார விநியோக திட்டம். தொழில்நுட்ப மற்றும் சமயரீதியான பிரச்சினைகளால் தடங்கிப்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் 2007 ஆம் ஆண்டு பிரேரிக்கப்பட்டது. எனினும் இந்த திட்டத்தின்போது பயன்படுத்தப்படும் வயர்களின் நீளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை,மற்றும் ராமர் பாலம் என்ற சமயரீதியான பிரச்சினை என்பன தடங்கல்களை ஏற்படுத்தியுள்ளன.
இந்ததிட்டத்தின் மூலம் 1000 மெகாவோட்ஸ் மின்சாரத்தை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விநியோகிக்க முடியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் மதுரைக்கும் இலங்கையின் அநுரதப்புரத்துக்கும் இடையில் இந்த விநியோகத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
இதற்காக 3000 கோடி ரூபாவை முதலிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் சட்டத்திற்கு மேல் செல்ல முடியாது!- விதுர விக்ரமநாயக்க
[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 02:41.57 AM GMT ]
அரசியல்வாதிகள் சட்டத்திற்கு மேல் செல்ல முடியாது என முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சிலருக்கு விசித்திரமான காய்ச்சல் காணப்படுகின்றது. சட்டம் தொடர்பிலான அறிவில்லாவிட்டால் அரசியல் நடத்த முடியாது. சட்டத்தை அமுல்படுத்தும் முயற்சியின் முக்கிய பங்காளிகள் என்பதனை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசியல்வாதிகள் என்ற மாத்திரத்தில் அவர்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் என்று எவரையும் கருத முடியாது.
அதிகாரம் பதவிகள் கிடைக்கப் பெறும் போது நாம் மேலும் மேலும் சட்டத்திற்கு கீழ்படிந்து செயற்பட வேண்டும்.
ஏனையவர்களுக்கு நாம் முன்னுதாரணமாக திகழ வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஹொரணை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten