[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 12:07.06 PM GMT ]
இது தொடர்பாக தமிழர் பண்பாட்டு நடுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பு வருமாறு :
2009 ஈழப் போரின் போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.சில தினங்களுக்கு முன்பு ஈழத்தில் இருந்து குசலக் குமாரி என்ற தாய் இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தனது மகனை மீட்க தமிழகம் வந்துள்ளார் என்ற செய்தியை வெளியிட்டோம்.
அதன் பின்பு பல அழைப்புகள் வெளிநாட்டில் இருந்து வந்த வண்ணம் உள்ளது. பலரும் தங்கள் உறவுகளை காணவில்லை, அண்ணனை காணவில்லை, தம்பியை காணவில்லை. இந்தோனேசியாவில் கடைசியாக அவனது குரலை கேட்டோம் என்று நமக்கு செய்தியை அனுப்பிய வண்ணம் உள்ளனர்.
பல ஈழத் தமிழர்கள் அவுஸ்திரேலியா செல்லும் போது படகு மூழ்கி பலியாகி உள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு இந்தோனேசிய சிறைச்சாலையில் உள்ளனர். சிலர் திறந்தவெளி முகாமில் உள்ளனர். சிலர் இரண்டில் இருந்தும் தப்பித்து வெளியே அடையாளம் மறைத்து வாழ்ந்து வருகின்றனர்.
உலகெங்கும் இருக்கும் ஈழத் தமிழர்கள், தொலைந்து போன தங்கள் உறவை மீட்டுத் தாருங்கள் என நம்மிடம் கேட்பது நெஞ்சை நெகிழ வைக்கிறது. உலகில் நாடு இல்லாத தமிழரை மீட்க யார் தான் முன்வருவார்?
இந்தோனேசியாவில் உள்ள சில தமிழர்கள் அவ்வப்போது நமக்கு உதவ சில செய்திகளை சொல்கிறார்கள். எனினும் ஒருவரை கூட நம்மால் தொடர்பு கொள்ள முடியவில்லை. தமிழினத்தை போல் இவ்வளவு வலியும் வேதனையும் சுமந்த வேறு ஒரு இனம் இல்லை என்றே தோன்றுகிறது.
உண்மையில் நாடு கடந்த தமிழீழ அரசோ அல்லது தமிழ் அமைப்புகளோ இந்தோனேசியாவில் தான் அதிக வேலை பார்க்க வேண்டி உள்ளது. அங்குள்ள எல்லாத் தமிழர்களையும் மீட்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
அதற்கு அவர்கள் அங்கேயே சில காலம் ஒரு அலுவலகத்தை அமைத்தால் தமிழர்களை மீட்க பயனுள்ளதாக அமையும் என்று எண்ணுகிறோம்.
உலகில் பல்வேறு மூலையில் இருந்து தமிழர்கள் படங்களை அனுப்பி உள்ளனர். காணாமல் போனர்வர்களின் படங்களையும், இந்தோனேசியாவில் தரை இறங்கிய தமிழர்களின் படங்களையும் இணைத்துள்ளோம்.
இவர்களைப் பற்றி உங்களுக்கு ஏதாவது சிறு தகவல் தெரிந்தாலும் உடனே எங்களை தொடர்பு கொள்ளவும்.
தமிழர் பண்பாட்டு நடுவம்
மின்னஞ்சல் tamilsculturalcentre@gmail.com 9566224027
மின்னஞ்சல் tamilsculturalcentre@gmail.com 9566224027
தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள்!- அமெரிக்கா அறிவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 08:22.33 AM GMT ] [ புதினப்பலகை ]
இலங்கையுடனான தீவிரவாத முறியடிப்புக்கு ஒத்துழைப்பு மற்றும் பயிற்சிகளை அமெரிக்கா கடந்த ஆண்டில் மட்டுப்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளது.
இலங்கை படைகளால் கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட மனித உரிமைமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சட்டரீதியாகவும், கொள்கை ரீதியாகவும், இந்த ஒத்துழைப்பை மட்டுப்படுத்துவதற்கு காரணமாகியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள 2012 ம் ஆண்டுக்கான தீவிரவாதம் தொடர்பான நாடுகளின் அறிக்கையிலேயே இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
2009இல் தமிழ்ப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதி ஆதரவு வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவது குறித்து இலங்கை கவலை கொணடுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளினது என்று குற்றம்சாட்டப்படும் நிதி அமைப்புகளை இலக்கு வைத்து பல தீவிரவாத முறியடிப்பு செயற்பாடுகளை இலங்கை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போர் நடைபெற்ற பிரதேசங்களில், இலங்கை 2012ம் ஆண்டில் பலமான இராணுவத்தை பராமரித்து வந்ததாகவும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீள எழுச்சி கொள்ளும் சாத்தியம் குறித்து குரல் எழுப்பப்பவதாகவும் அமெரிக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் எச்சங்களை முற்றாக அழிப்பதற்கு சிறிலங்காவில் தீவிரவாத முறியடிப்பு சட்டங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுவதாகவும், அதில் கூறப்பட்டுள்ளது.
தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம், உள்நாடு பாதுகாப்புத் திணைக்களம், பாதுகாப்புத் திணைக்களம், போன்றவற்றுடன் சிறிலங்கா தனது கடல்சார் எல்லை பாதுகாப்பில் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த அறிக்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடர்ந்தும் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாகவே இராஜாங்கத் திணைக்களம் பட்டியலிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten