தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 mei 2013

மட்டக்களப்பில் விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட தகராறினால் 13 பேர் காயம் (செய்தித்துளிகள்)!


யாழில் வாகன விபத்து: இராணுவ வீரர்கள் இருவர் படுகாயம்
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 05:34.58 AM GMT ]
இராணுவத்தினரின் டிரக் வண்டியும் ஹயஸ் ரக வாகனமும் விபத்திற்குள்ளானதில் 2 இராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ். கந்தர்மடம் சந்தியில் நேற்றிரவு 09.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக யாழ். போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சமிந்த சில்வா தெரிவித்தார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர் கூறினார்.

புஞ்சு பண்டா (வயது 47), அபயக்கோன் (வயது 33) ஆகிய இராணுவ வீரர்களே இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். முரளி (வயது 19) இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் யாழ். போக்குரவத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பில் விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட தகராறினால் 13 பேர் காயம் (செய்தித்துளிகள்)
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 05:24.51 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட கைகலப்பின் போது 13 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த கைகலப்புச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்பட்டு வரும் விளையாட்டுப் போட்டியின் எல்லே போட்டி காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள ஆரையம்பதி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
ஆரையம்பதி இராஜதுரை இளைஞர் கழகத்திற்கும் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள களுவன்கேணி இளைஞர் கழகத்திற்கும் இடையில் இந்த எல்லே போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஒரு கழகத்தின் ஆதரவாளர்கள் மைதானத்தில் கூச்சலிட்டதன் காரணமாக இந்த கைகலப்பு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கைகலப்பின் போது 13 பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த 13 பேரில் 8 பேர் சிகிச்சை பெற்று நேற்றையதினமே வெளியேறியதாகவும் ஒருவர் மாத்திரமே சிகிச்சை பெற்றுவருதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த கைகலப்புச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
சிறுவன் ஒருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றம்
மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் சிறுவன் ஓருவன் ஊஞ்சல் சாரம் களுத்தில் இறுகியதினால் ஆபத்தான நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்

விஷ்ணு கோயில் வீதி கிரானைச் சேர்ந்த ஜீ.கவிராஜ் வயது (10) என்ற சிறுவனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

வீட்டில் கட்டப்பட்ட துணி காயப்போடும் கொடியில் போடப்பட்ட சாரம் துணியில் களுத்தின் பகுதியை வைத்துக் கொண்டு துள்ளி, துள்ளி விளையாடிய போது கால் சறுக்கியதால் களுத்து பகுதி இறுகியதனால் இச்சம்பவம் சம்பவித்துள்ளதாக பிரதேச கிராம சேவகர் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten