[ புதன்கிழமை, 29 மே 2013, 02:43.23 PM GMT ]
சுமார் 60 மாணவர்கள் பங்குபற்றிய இவ்வார்ப்பாட்டத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படும் முன்னாள் இசைத்துறை தலைவர் தர்சானந்தை மீள நியமிக்க கோரி பல்வேறு கோசங்களுடன் ஈடுபட்டனர்.
இவ்வார்ப்பாட்டத்திற்கு இசைத்துறையின் ஒருசில விரிவுரையாளர்கள் ஆதரவு தெரிவித்ததை காணமுடிந்தது. மேலும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக கலைப்பீட மாணவர் ஒன்றியம், பொதுமாணவ பிரதிநிதி ,கலைப்பீடாதிபதிக்கோ எதுவித முன்னறிப்பும் செய்யப்படவில்லை.
ஏற்கனவே இசைத்துறை தலைவராக இருந்த தர்சானந் தொடர்பாக ஊடகங்களில் பல்கலைக்கழக மாணவிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பாக செய்திகள் வெளிவந்திருந்தன.
இதன் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் அவர் மீது விசாரணை மேற்கொண்டு அதில் இருந்து குற்றமற்றவர் என தீர்மானித்து விடுவித்திருந்தாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் இன்று ஆர்பாட்டம் மேற்கொண்டிருந்த மாணவர்கள் மீளவும் துணைவேந்தரினால் இசைத்துறை தலைவருக்கான மீள் நியமனம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை கலைப்பீடாதிபதி சிவநாதன் கிழித்தெறிந்ததாக தெரிவித்தனர்.
மேலும் எமது இசைத்தறை தலைவரின் காலத்தில் தான் தங்கள் துறை வளர்ச்சி கண்டது, இதனை சகிக்க முடியாத சில விரிவுரையாளர்கள் தவறாக மாணவர்களை வழிநடத்தி இசைத்துறையின் வளர்ச்சியை குழப்ப முயல்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர், கலைப் பீடாதிபதியை தொடர்பு கொண்டபோது பலனளிக்கவில்லை. ஆனால் இராமநாதன் நுண்கலைகழக பொது மாணவப் பிரதிநிதி விதுசன் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த ஆர்பாட்டம் தொடர்பாக எனக்கு அறிவிக்கப்படவில்லை. மேலும் இவ்வார்ப்பாட்டம் முன்னாள் இசைத்துறை தலைவருக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னாள் இசைத்தறை தலைவர் தனது மாணவிகளுடன் எவ்வாறு நடந்து கொண்டிருந்தார் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.
இவ்வாறான செயற'பாடுகளில் ஈடுபட்ட அவர் அப்பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர். எனவே அவர் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை மீள நடத்தப்படல் வேண்டும் என்றார்.
வற்றாப்பளை அம்மனிடம் அருள் வாங்கப் போனோர் இராணுவத்திடம் அடி வாங்கி வந்தனர்
[ புதன்கிழமை, 29 மே 2013, 02:13.53 PM GMT ]
முல்லைத்தீவு – வற்றாப்பளை அம்மன் கோவிலுக்கு சென்றோர் நேற்று திரும்பும் வழியில் முல்லைத்தீவு கரையோரத்தில் நிற்கும் ஜோர்தானிய கப்பலைப் பார்வையிடச் சென்று படையினரிடம் முறையாக அடி வாங்கித் திரும்பினர்.
வற்றாப்பளை அம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் இம்முறை பக்தர் கூட்டம் அலை மோதியது. கோவிலுக்குச் சென்றோரில் பலர் திரும்பும் வழியில் ஜோர்தானிய கப்பல் நிற்கும் இடம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் இருந்ததாக கூறப்படும் வீடு ஆகியவற்றையும் ஒரு சுற்றுப் பார்வையிட்டுவரச் சென்றனர்.
வழமையாக தென்னிலங்கையில் இருந்துவரும் பயணிகளை கப்பலுக்குள் பக்குவமாக அழைத்துச் சென்று தமது சாகசங்களைக் கூறி படையினர் வழிகாட்டி அனுப்புவது வழமை.
இந்நிலையில் நேற்று பிற்பகல் கப்பல் தரித்து நிற்கும் பகுதிக்கு சென்ற இளைஞர்கள் சிலர் தென்னிலங்கைச் சுற்றுலாப் பயணிகள் வழமையாக செயற்படுவதுபோன்று ஆர்வக் கோளாறில் தாமும் கப்பலுக்குள் ஏறி பார்வையிட்டனர்.
இந்த நிலையில் அங்கு கடமையில் இருந்த படையினர் சிலர் வந்த வேகத்தில் கப்பலுக்குள் ஏறியோர், அதனைத் தொட்டுப் பார்த்து வியந்தோர் என பலரையும் திடீரென சரமாரியாகத் தாக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் அருள்வாங்கப்போய் அடி வாங்கிய தமது விதியை நொந்துகொண்டு அவர்கள் வீடு திரும்பினர்.
Geen opmerkingen:
Een reactie posten