தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 mei 2013

வன்முறை பற்றி வெளிப்படுத்தவும் கலைநயப்படுத்திக் காட்டவும் வாருங்கள்! - கனடிய தமிழர் பேரவை


சிராணி மீதான குற்றப்பிரேரணை! இரா.சம்பந்தன், விஜித ஹேரத் கருத்து தெரிவிக்க உயர்நீதிமன்றம் அனுமதி!
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 12:17.46 AM GMT ]
முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட மேன்முறையீட்டு மனுக்குறித்து கருத்து தெரிவிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் விஜித ஹேரத் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் நேற்று அனுமதியளித்துள்ளது.
குற்றப்பிரேரணையை விசாரணை செய்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிகையை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட கட்டளையை ரத்துசெய்யுமாறு கோரியே சட்டமா அதிபரினால் விசேட மேன்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களான சலீம் மர்சூக், பி.ஏ. ரத்னாயக்க, சந்தியா ஹெட்டிகே, ரிவா வணசுந்தர, ரோகிணி மாரசிங்க ஆகிய ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழாம் முன்னிலையில் நேற்று ஆராயப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்ட வாதங்களின் அடிப்படையிலேயே அவ்விருவருக்கும் கருத்துரைப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.
மனு மீதான விசாரணை யூன் 10ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வன்முறை பற்றி வெளிப்படுத்தவும் கலைநயப்படுத்திக் காட்டவும் வாருங்கள்! - கனடிய தமிழர் பேரவை
[ புதன்கிழமை, 29 மே 2013, 07:05.24 PM GMT ]
கறுப்பு பூலை 30 ஆவது ஆண்டு நினைவு வழிபாட்டையிட்டு கனடிய தமிழர் பேரவை (CTC) கடந்த கால வன்முறையை எதிரொளிக்கும் கலைச்சுவையுள்ள படைப்புக்களை சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறது.
1983 இல் தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட இனக்கலவரத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள்கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளேயும் வெளியேயும் இடப்பெயர்ந்தார்கள்.
இந்த வன்முறை பல தலைமுறை மக்களின் நினைவில் பதியப்படவுள்ளது. யூலை 24 - யூலை 29 கால இடைவெளியில் கொழும்பிலும் சிறீலங்காவின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்கள் திட்டமிட்ட இனரீதியான வன்முறைக்கு இலக்காகினர். இதுவே தமிழ்மக்களுக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையில் ஒரு ஆயுத மோதலின் தொடக்கத்தைத் தூண்டிவிட்டது.
அந்தக் கோடை கால நிகழ்வுகள் முழு நாட்டின் வரலாற்றையே மாற்றியமைத்தது. அதன் தாக்கத்தை நாட்டிலும் நாட்டுக்கு வெளியிலும் வாழும் சமூகத்தினால் இன்றும் உணரப்படுகிறது.
இருபத்தாறு ஆண்டுகள் கழித்து மே 2009 இல் சிறீலங்கா அரசு மேற்கொண்ட கொடிய போர் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிகொண்ட ஆயுத மோதல் ஒரு குருதிதோய்ந்த முடிவுக்கு வந்தது. ஆயுதங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மவுனிக்கப்பட்டாலும் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் சமூகங்களின் அடிப்படை மனித உரிமை மற்றும் தன்மானம் தொடர்ந்து அரசினால் மறுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படைப்புக்களை சமர்ப்பிக்குமாறு விடுக்கும் வேண்டுகோள் சமூக கலைஞர்களுக்குத் தமிழ்த்தன்மையை பல்வேறு வழிகளில் கலைநயத்தோடு கடந்த காலத்தை புரிந்து கொள்ளவும் நிகழ்கால நிலைமைகளை விளக்கவும் வாய்ப்பளிக்கிறது. இந்தப் படைப்புக்கள் முப்பது ஆண்டுகால வன்முறை இடப்பெயர்வுமற்றும் வடக்கு - கிழக்கு வாழ் தமிழ்மக்களது மனித உரிமை மறுப்பு ஆகியவற்றின் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேலான பார்வையைத் தீட்டிக் காட்டுவதாக இருக்க வேண்டும்.
இந்தக் கொடுமைகளை வெற்றிகொண்டு உயிர்வாழும் தமிழ்மக்களது வலிமையையும் மீட்டெழுச்சியையும் எதிரொளிக்கும் படைப்புக்களை சமர்ப்பிக்குமாறு நாங்கள் ஆணித்தரமாகப் பரிந்துரைக்கிறோம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புக்கள் யூலை 26இ 2013 வாரத்தில் ரொறன்ரோவில் உள்ள ஒரு கலையகத்தில் காட்சிப் படுத்தப்படும். கடந்த 30 ஆண்டுகாலமாகவடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ்மக்களது ஒத்துரிமையையும் மனித உரிமைகளையும் எதிரொளிக்கும் சிறந்த படைப்புக்குப் பொற்கிழி வழங்கப்படும்.

படைப்புக்கள் படைப்பு ஆற்றல் உள்ள ஊடகம் எதனையும் உள்ளடக்குவதாக இருக்கலாம். ஆனால் அவை காட்சிசார்ந்த ஓவியம் ஓவியம் வரைவடிவம் சிற்பம் புகைப்பட கட்டுரைகள் சுவரொட்டிகள் எண்ணியல் ஓவியம் குறம்படங்கள் அசைவூட்டல் பாடல் வாய்மொழி பன்னூடகம் முதலியற்றை மட்டும் உள்ளடக்குவதாக இருக்க வேண்டும் என்பதில்லை.

படைப்புக்கள் கீழ்க்கண்டவற்றை உள்ளடக்க வேண்டும்:

- படைப்புக்கு ஒரு தலைப்பு

- படைப்பின் பன்/ஊடகம்

- படைப்புக்கள் எதனை சார்புபடுத்துகிறது
அது எப்படி இந்த படைப்புகளின் கருப்பொருளுக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பது பற்றி ஒரு சிறுவிளக்கம். (விளக்கம் 150 சொற்களுக்கு மேற்படக் கூடாது)

- .jpeg வடிவத்தில் உடல் உழைப்பைக் காட்டும் புகைப்படம்

- நூறு சொற்களில் கலைஞர்(கள்) பற்றிய வாழ்க்கைவரலாறு

படைப்புக்கள் யூன் 15, 2013 பிந்தாது info@blackjuly83.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

கலையகத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படும் படைப்புக்கள் யூலை 05 2013 அளவில் அறிவிக்கப்படும்.

இது தொடர்பாக உங்களுக்கு ஏதாவது கேள்வி இருந்தால் அல்லது மேலதிக தகவல் தேவைப்பட்டால்
என கனடிய தமிழர் பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten