[ திங்கட்கிழமை, 27 மே 2013, 02:20.45 AM GMT ]
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு எதிரான வழக்கு ஒன்றில், ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க இன்று சாட்சியமளிக்க உள்ளார்.
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை இணைத்துக் கொண்டு நாட்டுக்கு எதிராக செயற்பட்டதாகத் தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் 3 இராணுவ முகாம்களைத் தவிர ஏனையவை பலாலிக்குள் உள்வாங்கப்படுமானால் பிரதேச செயலர் பிரிவுகளில் படையினரால் தனியார் காணிகள் சுவீகரிக்கப்படுவது ஏன் என்று பொது மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சியாளராக லலித் வீரதுங்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
படைவீரர்களின் அரசாங்க விசுவாசத்தை சீர்குலைத்து தமது அரசியல் நோக்கங்களைப் பூர்த்தி செய்து கொண்டதாக சரத் பொன்சேகா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முகாம்களைப் பலாலிக்கு நகர்த்தினால் காணிகள் சுவீகரிப்பு எதற்கு?; இராணுவத் தளபதியிடம் மக்கள் கேள்வி
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 03:59.54 AM GMT ]
தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள 17 இராணுவ முகாம்களை 3 முகாம்களாக குறைக்கப் போவதாகவும், அகற்றப்படும் 14 முகாம்களும் பலாலி இராணுவக் குடியிருப்புக்குள் உள்வாங்கப்படும் என்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய அண்மையில் கூறியிருந்தார்.
ஆயினும், யாழ். மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் இராணுவ முகாம் அமைப்பதற்கு மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதற்கான அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் இதுவரை 13 இடங்களில் இராணுவ முகாம்கள் அமைப்பதற்குக் காணிகள் தேவை எனச் சுவீகரிப்பு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன.
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிச் சுவீகரிப்பைத் தவிர்த்தே 13 இடங்களில் சுவீகரிப்பு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளும் இராணுவ முகாம்களை அமைப்பதற்கு இராணுவத்தால் கோரப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி மூன்று முகாம்கள் தொடர்ந்து இருக்கும் என்று தெரிவித்துள்ள நிலையில் மேற்படி சுவீகரிப்பு நடவடிக்கைகள் எதற்காக இடம்பெறுகின்றன என்று மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten