தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 15 mei 2013

குமுதினி படுகொலையின் நினைவு நாள் இன்று!


தாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம்
[ புதன்கிழமை, 15 மே 2013, 07:24.35 AM GMT ]
தாய்லாந்து பிரதமர் ஜிங்லுக் சினவற்ரா (Yingluck Shinawatra)  எதிர்வரும் 31ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரும் அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,  இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு குறித்து கலந்துரையாடுவதுடன் இரு நாடுகளுக்கிடையிலான பல ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடுவார் என்றும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்யும் தாய்லாந்து பிரதமர், அங்கு வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் மகா நாயக்க தேரர்களையும் சந்திக்க கலந்துரையாடவிருக்கின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இலங்கை- தாய்லாந்து வணிக தலைவர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


குமுதினி படுகொலையின் நினைவு நாள் இன்று
[ புதன்கிழமை, 15 மே 2013, 07:31.20 AM GMT ]
குமுதினி படகு படுகொலையின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் நினைவு கூரப்படுகிறது.
1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து குறிக்கட்டுவான் நோக்கி குமுதினி படகில் பயணம் செய்த பயணிகளை நயினாதீவில் முகாமிட்டிருந்த கடற்படையினர் வழிமறித்து வெட்டி படுகொலை செய்தனர்.
இதில் பெண்கள், குழந்தைகள், உட்பட 36பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பெரும்பாலானவர்கள் கை,கால்களை இழந்து அங்கவீனமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten