தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 15 mei 2013

உயிரினும் மேலான ஈழ உறவுகளே மீண்டும் ஒரு முறை முழங்குக! -வைகோ அழைப்பு


வடக்கு மக்கள் புத்தியை பாவிக்கும் காலம் கனிந்துள்ளது: பசில் ராஜபக்ச
[ புதன்கிழமை, 15 மே 2013, 07:43.13 AM GMT ]
வடக்கு மக்கள் தமது புத்தியை பாவித்து நடந்துகொள்ளும் காலம் வந்துள்ளதாக பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டால், பல்வேறு அரசியல் கட்சிகள் மக்களை சந்தித்து, வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு பொய்யான உறுதிமொழிகளை வழங்குவர்.
வெளிநாடுகளிடமிருந்த கிடைக்கப் பெற்ற நிதியின் 85 சதவீதமானவை வடக்கின்  அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனை பெற்றுத் தந்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பதை வடக்கு மக்கள் மறக்கக்கூடாது.
இதன் காரணமாக வடக்கு மக்கள் புத்தியுடன் நடந்து கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தலைமன்னார் தொடரூந்து பாதையை மதவாச்சியில் இருந்து மடு வரையும் ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உயிரினும் மேலான ஈழ உறவுகளே மீண்டும் ஒரு முறை முழங்குக! -வைகோ அழைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 06:21.11 PM GMT ]
லண்டன் மாநகரில் நடைபெறவிருக்கும் முள்ளிவாய்க்கால் துயரத்தின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் லட்சக் கணக்கில் கலந்து,  கல்லறையினில் உறங்கும் எங்கள் உறவுகளுக்கு மறுக்கப்பட்ட   நீதி வேண்டி  உரக்கக் குரல் கொடுக்குமாறு லண்டன் வாழ் தமிழ் மக்களை  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறை கூவல் விடுத்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடைபெறுவதை தடை செய்ய வேண்டியும் புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என மேலும் வேண்டியுள்ளார்.
எதிர்வரும் மே மாதம் 18ம் திகதி இந்நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten