தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 15 mei 2013

மட்டு.சித்தாண்டியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு !!


யாழ்.கோப்பாயில் இளைஞரைக் காணவில்லை! பொற்றோர் பொலிஸில் முறைப்பாடு
[ புதன்கிழமை, 15 மே 2013, 04:27.53 AM GMT ]
யாழ்ப்பாணம் கோப்பாயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமற்போயுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்.கோப்பாய் மத்தி வெள்ளுருவப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த 28 வயதுடைய சிவலிங்கம் தவக்குமார் என்ற இளைஞரே காணாமற்போயுள்ளதாக பெற்றோர் இன்று காலை முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த 26 ஆம் திகதி வீட்டில் இருந்த புறப்பட்டவர் இதுவரை வீடுவந்து சேரவில்லை எனவும் அவருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை எனவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த இளைஞர் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மட்டு.சித்தாண்டியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு (செய்தித் துளிகள்-3)
[ புதன்கிழமை, 15 மே 2013, 04:41.19 AM GMT ]
மட்டக்களப்பு சித்தாண்டி விநாயகபுரத்தில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான குணசீலன் பிள்ளையான் (35 வயது) என்பவர், அவரது வீட்டினுள்ளிருந்தே சடலமாக மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
வேலைக்குச் செல்வதாகக் கூறி நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் பகல் வீட்டில் சடலமாக காணப்பட்டதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீரின் உத்தரவுக்கமைய சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
மட்டக்களப்பு எறாவூர் பொலிஸ் பிரிவில் ஹெரோயின் போதைப் பொருள் (குடு பக்கற்) விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு சந்தேக நபர்கைள ஏறாவூர் பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 20 ஹெரோயின் போதைப் பொருள் பக்கற் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஏறாவூர் ரெலிக்கொம் வீதியில் இரவு வேளையில் விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.டபிள்யூ.ஜி.கொடகொம்புற தலைமையிலான பொலிஸ் பிரிவினர் உரிய இடத்திற்குச் சென்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்பு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு சம்பந்தமான மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வீ.இந்திரனின் உத்திரவின் பேரில் போதை ஒழிப்பு நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றன.
அண்மையில் நாவற்குடாவில் 34 கிலோ கிராம் போதைப் பொருள் வைத்திருந்ததின் பேரின் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் சட்டவிரோத மின்சாரம் பெற்றவர்களை கைது செய்ததன் மூலம் 37 லட்சம் ரூபாய் வருமானம்
சட்டவிரோதமாக மின் மானிகளை உடைத்து மின்சாரம் பெற்ற குற்றத்தின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் மூலம் இலங்கை மின்சார சபைக்கு கடந்த ஒரு வாரத்தில் (07.05.2013 – 14.05.2013) முப்பத்தேழு இலட்சம் ரூபா வருமானமாக கிடைத்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் புலன் விசாரணைக்குப் பொறுப்பான புலனாய்வு அதிகாரி எம்.ஆர்.எம்;.பி.தஸனாயக்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் ஐம்பது பேரும், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நாற்பத்தைந்து பேருமாக கைது செய்யப்பட்ட தொண்ணூற்றி ஐந்து பேரிடமிருந்து மின்சார சபைக்கு முப்பத்தேழு இலட்சம் ரூபா வருமானமாக கிடைத்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்று வருபவர்களுக்கு இலங்கை மின்சார சபை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வீ.இந்திரனின் ஒத்துழைப்புடன் அந்தந்த பிரிவு பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளின் மூலம் இரண்டு பொலிஸ் பிரிவுகளில் கைது செய்யப்பட்ட நபர்களை நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தியற்கிணங்க முப்பத்தேழு இலட்சம் ரூபா இலங்கை மின்சார சபைக்கு வருமானமாக கிடைத்தாக புலனாய்வு அதிகாரி எம்.ஆர்.எம்;.பி.தஸனாயக்க மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten