வட, கிழக்கு பகுதிகள் தமிழர்களின் பூர்வீக பூமி என்பதை ஏற்றுக் கொள்ளும் அரசு, அதனை அமுல்படுத்த மறுக்கிறது: யோகேஸ்வரன்
[ சனிக்கிழமை, 11 மே 2013, 06:03.55 AM GMT ]
தான் கட்சியில் இருக்கும் போது மற்றவர்களுக்கு தலைமைத்துவம் கொடுத்து அழகுபார்த்த பெருமை தந்தை செல்வாவையே சாரும் என்றும் அவர் கூறினார்.
தந்தை செல்வாவின் 36 வது நினைவு தின நிகழ்வு மட்டக்களப்பு வந்தாறுமூலை நிர்முகப்பிள்ளையார் ஆலய முன்றலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தொடர்ந்து உரையாற்றுகையில்!
“எமது நட்டிலே மாறிமாறி வந்த அரசாங்கள் ஆட்சியைப் பிடிப்பதற்காக தமிழர்களுக்கு தீர்வு பெற்றுத்தருவோம் என வாக்குறுதிகளை வழங்கிவிட்டு வெற்றிபெற்றதும் எங்களை தூக்கியெறிவது தந்தை செல்வா காலத்திலிருந்தே தொடர்ந்தும் இடம்பெற்றுவருகிறது.
தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தந்தை செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சியினர் அகிம்சை வழிப்போராட்டம் நடாத்தும் போது சிங்கள காடையர்கள் தாக்கினார்கள். அதன்பின்புதான் இலங்கையிலே தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என தமிழ்நாடு உணர்ந்துகொண்டது.
2009 ஆண்டு இப்போது இருக்கின்ற அரசு எமது இனத்தைக் கொன்றுகுவித்த போது தான் இந்த உலகமே தமிழர்களுக்காக குரல்கொடுக்க பொங்கியெழுந்தது. தமிழர்களுக்கு இங்கு பிரச்சினை உள்ளது என வெளிநாடுகள் உணருமளவிற்கு முதல் அத்தியாயத்தைக் கொடுத்தவர் தந்தை செல்வா.
வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதனை சிங்கள அரசு ஏற்றுக்கொண்டு பண்டா - செல்வா ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதனை எதிர்த்த ஐக்கிய தேசிய கட்சி 1965ஆம் ஆண்டு டட்லிஸ் சேனாநாயகாவின் தந்தை செல்வாவோடு வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். தந்தை செல்வாவின் துணையோடு இணைந்து தமிழர்களின் வாக்குகளால் சிறிமாவோ பண்டாரநாயகா டட்லிஸ் சேனாநாயகாவின் ஆட்சியை கவிழ்த்து ஆட்சிக்கு வந்தார் ஆனால் அவரும் ஏமாற்றிவிட்டார்.
தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க கூடாது என்று சிங்கள பிக்குகளுடன் கண்டி யாத்திரை செய்த ஜே.ஆர்.ஜெயவர்தன வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமி என ஏற்றுக்கொண்டு 1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்துகொள்கிறார். அதன் பின்வந்த பிரேமதாஸ மங்கள முனசிங்க அர்களின் அறிக்கையின் பிரகாரம் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். அதற்கு பின்புவந்த சந்திரிகா அம்மையாரும் எமது தாயக பூமியை ஏற்றுக்கொண்டார். தற்போதைய ஜனாதிபதி கூட பிரதமராக இருக்கும் போது தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு சர்வகட்சிக் குழுவொன்று அமைத்திருந்தார். இவர்கள் எவருமே எந்தவித தீர்வுத் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை.
எங்களது அடிப்படை உரிமைகள் எல்லாமே பறிக்கப்படுகின்றன வடக்கு கிழக்கு மாகாணங்களின் தமிழர்களின் அடையாளங்களை மாற்றுவதில் தீவிரமாக செயற்படுகிறார்கள். எமது தாயக ப+மியிலே இராணுவத்தினர் வீடுகளை முகாம்களை அமைப்பதற்கு சட்டங்களைக் கொண்டுவந்து எமது காணிகள் சுவீகரிக்கிறார்கள்.
கிழக்கு மண்ணிலே பெரும்பான்மையாக வாழ்ந்த எமது தமிழினத்தின் அடையாளங்கள் தற்போது மாற்றப்பட்டு வருகின்றன. திருமலை அம்பாறை மாவட்டங்களில் சிங்கள குடியேற்றங்களை அமைத்து பாராளுமன்ற பிரதிநித்துவத்தை பெற்றுவிட்டார்கள் தற்போது மட்டக்களப்பிலும் கை வைத்துவிட்டார்கள்.
யாழ்ப்பாணத்திலே காணிகளைச் சுவீகரித்து இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு வழங்கி சிங்கள குடியேற்றங்களை அமைத்து இனபரம்பலை மாற்றியமைக்கப் போகிறார்கள். அதுமட்டுமின்றி இராணுவ முகாம்களில் பௌத்த விகாரைகளை அமைத்து தமிழர்களின் அடையாளங்களை அழித்து வடக்கு கிழக்கு தமிழர்களின் பூர்வீக பூமி அல்ல என்பதை உருவாக்குவதற்காக இந்த அரசாங்கம் திட்டமிட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையை அன்று அறிந்த தந்தை செல்வா தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என கூறியிருந்தார்” என்றார்.

இலங்கைகான புதிய ஜேர்மனியத் தூதுவர் யாழ்.விஜயம்
[ சனிக்கிழமை, 11 மே 2013, 03:03.30 AM GMT ]
நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இவர், யாழ்.ஆயரை நேற்று ஆயர் இல்லத்தில் சந்தித்து யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இதன்பின்னர் யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியையும் இவர் சந்தித்துக் கலந்துரையாடினார். இவர் இதுதவிர மேலும் பலரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten