தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 11 mei 2013

தெரிவுக்குழுவில் இணைய ஐதேகவுக்கு அழைப்பு!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்ய கொள்கை இணக்கம்
[ சனிக்கிழமை, 11 மே 2013, 02:47.03 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.
டெலோ முதல்வர் எம். கே சிவாஜிலிங்கம் இந்த தகவலை இலங்கையின் உள்ளூர் வானொலிக்கு ஒன்று மூலம் வெளியிட்டுள்ளார்.
கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வது தொடர்பில் ஏற்கனவே தமிழரசுக் கட்சியை தவிர்ந்த ஏனைய நான்கு கட்சிகள் மத்தியில் இணக்கம் ஏற்பட்டது. எனினும், தமிழரசுக்கட்சி மாத்திரம் அதில் பின்னடிப்பை காட்டிவந்தது.
இந்தநிலையில் மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப்பின் முயற்சியில் அரசியல் கட்சி பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் அடிப்படையில் நேற்று டெலோவுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில் அரசியல் கட்சியாக பதிவுசெய்ய கொள்கை இணக்கம் ஏற்பட்டதாக சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, இன்று மன்னார் ஆயருடன் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் நடத்தும் சந்திப்பின்போது கூட்டமைப்பின் பதிவு என்ற விடயம் பெரும்பாலும் உறுதி செய்யப்படலாம் என்றும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.


தெரிவுக்குழுவில் இணைய ஐதேகவுக்கு அழைப்பு
[ சனிக்கிழமை, 11 மே 2013, 02:50.43 AM GMT ]
இலங்கையின் அரசியல் தீர்வுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்துக்கொள்ளுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கு அரசாங்கம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
அரசாங்க பிரதம அமைப்பாளர் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஐக்கிய தேசியக்கட்சி தெரிவுக்குழுவில் இணைவது அவசியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெரிவுக்குழுவில் இணைந்து தமது யோசனையை ஐக்கிய தேசியக்;கட்சி சமர்ப்பிக்குமானால் அது வரவேற்கத்தக்கது என்றும் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் பேச்சு நடத்தவுள்ளதாக அரசாங்கம் கூறிவருகிறது.
எனினும் இன்னும் அது நடைபெறவில்லை.
எனவே அதற்கு பின்னர் தெரிவுக்குழுவில் இணைவது குறித்து ஆராயலாம் என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தினேஸ் குணவர்த்தனவுக்கு பதில் அளித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten