தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 20 mei 2013

தமிழீழ சுதந்திர சாசனம்: ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பங்கெடுப்பு! சிங்களதமிழீழ தேசத்திற்கு பேரிடி


மே 18 இல் தமிழினப் பேரழிப்புக்கு எதிராக சுவிஸில் இடம்பெற்ற மரதன் ஓட்டம்!

MAY 19, 2013 COMMENTS OFF
மே 18 இல் தமிழினப் பேரழிப்புக்கு எதிராக சுவிஸில் இடம்பெற்ற மரதன் ஓட்டம்!
சுவிஸ் தலைநகர் பேர்ண் நகரில் நேற்றய தினம் மே 18ல் சர்வதேச ரீதியாக இடம்பெற்ற “GRAND PRIX VON BERN” மரதன் ஓட்டப் போட்டியில் ஏறத்தாழ 30 000ற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் பங்குபற்றியிருந்தார்கள்.
இப்போட்டியினை பல லட்சக்கணக்கான பல்லின மக்கள் கண்டு களித்தார்கள்.
இம்மரதன் ஓட்டப்போட்டியில் 2009 மே 18ல் முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசினால் அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்பினை கவனயீர்க்குமுகமாகவும், அதற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் “RUN AGAINST THE GENOCIDE” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட மேலாடைகள் அணிந்து தமிழ் இளையோரும், தமிழின உணர்வாளர்களுமாக 08 வீரர்கள் பங்கு பற்றி குறிப்பிட்ட நேரத்திற்குள் 16.093 கி.மீ (10மைல்கள்) கடந்து இலக்கினை அடைந்து பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டியின்போது எமது தமிழின அழிப்பு சார்ந்த துண்டுப் பிரசுரங்களும் இவர்களால் அங்கு வருகை தந்திருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்லின மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
swiss_1
swiss_2
swiss_3
swiss_4
swiss_5
swiss_6
swiss_7
swiss_8

தமிழீழ சுதந்திர சாசனம்: ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பங்கெடுப்பு! சிங்கள தேசத்திற்கு பேரிடி

MAY 19, 2013 COMMENTS OFF
தமிழீழ சுதந்திர சாசனம்:  ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பங்கெடுப்பு! சிங்கள தேசத்திற்கு பேரிடி
தமிழர் தேசத்தினை போரில் வெற்றி கொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, ஒரு இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது.


Geen opmerkingen:

Een reactie posten