தற்போது லண்டனில் ஹெலிகொப்டர் பாதுகாப்போடு மே 18 நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளதால் மெட்ரோ பொலிடன் பொலிசார் ஹெலிகொப்டரில் வலம் வந்து பாதுகாப்பு வழங்கி சிறிது நேரத்தில் ஊர்வலம் ஆரம்பமானது.
கிழக்கில் இராணுவ அடாவடித்தனம் – மாணவர்கள் ஏமாற்றம்
MAY 19, 2013 COMMENTS OFF
தென் தமிழீழத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் எந்தவிதப் போட்டிகளும் நடத்த வேண்டாம் என சிறிலங்கா இராணுவத்தினர் தடை போட்டனர். இதனால் போட்டிகளில் பங்குபற்ற வந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தென் தமிழீழ கல்வித் திணைக்களத்தினால் தமிழ்த்தினப் போட்டி நேற்று திருகோணமலை சேனையூர் மத்திய கல்லூரியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் போட்டிக்கான முன் ஆயத்தங்களுடன் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்காண மாணவர்கள் நேற்றுமுன்தினமே சேனையூர் மத்திய கல்லூரியில் வந்து தங்கியிருந்தனர்.
ஆயினும் அன்று இரவு 7 மணியளவில் போட்டி நடைபெறாது இன்று ஞாயிற்றுக்கிழமைக்கு அது மாற்றப்பட்டுள்ளதாக ஆசிரியர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
மறுநாள் போட்டிக்கு தயாரான நிலையில் தூர இடங்களில் இருந்து வருகை தந்த மாணவர்கள் திடீரென முன்னறிவித்தல் இன்றி போட்டி பிற்போடப்பட்டதால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே போட்டித் திகதி பாடசாலைக்கு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்பதால் நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என சிறிலங்கா இராணுவத்தினரே தடை போட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
Geen opmerkingen:
Een reactie posten