சிறிலங்கா தொடர்பில் கனடா முன்னெடுக்கும் நகர்வுகள் பற்றி உன்னிப்பாக அவதானித்து வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டை குழப்பும் நடவடிக்கையில் கனடா ஈடுபட்டுள்ளதாக என கண்காணிக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடத்தப்படுவது குறித்து கனடாவும் பஹாமாஸூம் அண்மையில் நடாத்திய பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டின் உண்மையான நிலைமைகள் குறித்து அந்தந்த நாடுகளுக்கு தெளிவுபடுத்துமாறு வெளிநாடுகளுக்கான சிறிலங்காத் தூதுரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் புலிகளை அச்சுறுத்தும் இலங்கை இரணுவம்
MAY 20, 2013 COMMENTS OFF
காணாமல் போனவர்கள் தொடர்பில், வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெறுமாறு மனுதாரர்கள், இராணுவ புலனாய்வாளர்களால் அச்சுறுத்தப்பட்டு வருவதாக காணாமற் போனோரை தேடிக் கண்டறியும் குழுவினர் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
இறுதிக்கட்ட போரின் ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்திருந்தர். இவர்களை, அவர்களது உறவினர்களின் கண்ணெதிரே படையினரால் பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.
எனினும் அதன் பின்னர் அவர்களது நிலை என்னவென்று தெரியா நிலையில் அவர்களது உறவினர்கள் உள்ளனர். இந்த நிலையில் சரணடைந்து காணாமல் போனவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளவர்களில் ஐந்து பேர் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் ஆட்கொணர்வு மனுக்களை கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து, முல்லைத்தீவில் உள்ள 58 ஆம் படைப்பிரிவின் தலைமை அதிகாரியையும், இராணுவ தளபதியையும் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகி இது தொடர்பில் சாட்சியமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் வழக்கைத் திரும்பப் பெறுமாறு அதனைத் தாக்கல் செய்தவர்களுக்கு, தொலைபேசியூடாகவும், நேரிலும் சிறிலங்கா படையினர் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக அவர்கள் வழக்கை தொடர்ந்து நடத்துவது குறித்து அச்சம் அடைந்துள்ளதாக காணாமல் போனோரை தேடிக் கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten