தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 18 mei 2013

எரிக் சொல்ஹெய்ம் தமிழ் அரசியல் கட்சிகளை சந்தித்துள்ளார்


அமெரிக்கத் தூதுவர் சிசன், இரா. சம்பந்தன் குழுவினருடன் கலந்துரையாடல்!
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:41.07 AM GMT ]
வடக்கில் விஸ்வரூபமடைந்துள்ள காணிப் பிரச்சினை, வடமாகாண சபைத் தேர்தல் மற்றும் அரசியல் தீர்வுத் திட்ட பேச்சு உட்பட சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சிசன் விரிவான கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வடக்கில் திட்டமிட்ட அடிப்படையில் காணிகள் சுவீகரிக்கப்படுவதால் எழுந்துள்ள பிரச்சினைகள், அதிகரித்துள்ள இராணுவத் தலையீடு, மீள்குடியேற்றம் என்ற பெயரில் நடைபெறும் கொடுமைகள், இனப்பரம்பலை மாற்றியமைக்க அரசு மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் தொடர்பில் அமெரிக்கத் தூதுவருக்கு கூட்டமைப்பினர் சந்திப்பில் விரிவாக எடுத்துரைத்தனர் என்று கூறப்பட்டது.
அத்துடன், செப்ரெம்பர் மாதம் நடைபெறுமென அரசால் அறிவிப்பு விடுக்கப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்தும் அமெரிக்கத் தூதுவரிடம் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய கூட்டமைப்பினர் "சர்வதேச கண்காணிப்புக்கு மத்தியிலேயே வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்'' என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எரிக் சொல்ஹெய்ம் தமிழ் அரசியல் கட்சிகளை சந்தித்துள்ளார்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 09:21.59 AM GMT ]
நோர்வேயின் முன்hன்ள சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தமிழ் அரசியல் கட்சிகளை சந்தித்துள்ளார். இலங்கையின் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலின் போது சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் அவசியம் என தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
டுவிட்டரில் வெளியிட்ட தகவலில் தமிழ்க் கட்சிகளுடன் சந்திப்பு நடத்தியமை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு எங்கு நடைபெற்றது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Geen opmerkingen:

Een reactie posten