தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 18 mei 2013

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினர் மறைந்திருந்த வீடு கண்டுபிடிப்பு


அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழ் இளைஞரின் விசா ரத்து
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:23.36 AM GMT ]
அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை இளைஞரின் விசாவை ரத்து செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
டி.செல்வராஜா என்ற 21 வயதுடைய இலங்கை இளைஞரின் விசாவே இவ்வாறு ரத்து செய்யப்படவுள்ளது.
பல்கலைக்கழக விடுதியில் வைத்து மாணவி ஒருவரை குறித்த இளைஞர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி மாணவருக்கு பிணை வழங்கினார்.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி குறித்த இளைஞன் அங்கு தங்கியிருந்ததாகவும் அவருக்கு தற்காலிக விசா அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினர் மறைந்திருந்த வீடு கண்டுபிடிப்பு
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:34.26 AM GMT ]
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்றபோது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினர் மறைந்திருந்ததாகக் கூறப்படும் வீடு ஒன்று ஆனந்தபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 1996ஆம் ஆண்டு தொடக்கம் பிரபாகரனின் குடும்பத்தினர் இந்த வீட்டில் வசித்து வந்ததாகவும் இதனால் அப்பகுதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருந்ததாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர் என கொழும்பில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten