தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 18 mei 2013

பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நிகழ்வுக்கு இலங்கைக்கு அழைப்பில்லை


தற்கொலை குண்டுத் தாக்குதல் - பொன்சேகாவிடம் சி.ஐ.டி வாக்குமூலம்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 11:03.31 AM GMT ]
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர்  வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி இராணுவத்தலைமையகத்தில் வைத்து, முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவை இலக்குவைத்து தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
கோட்டே மத்தியம்பலத்திலுள்ள சரத்பொன்சேகாவின் அலுவலகத்தில் வைத்தே குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி விடுதலைப்புலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரியினால், இராணுவத் தலைமையகத்திற்குள் நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் 27 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நிகழ்வுக்கு இலங்கைக்கு அழைப்பில்லை
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 07:30.21 AM GMT ]
பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நிகழ்வுக்கு இலங்கை நாட்டுக்கு அழைப்பு விடுக்கக் கூடாதென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
முதலாம் உலகப் போர் தொடர்பான நினைவு நிகழ்வுகள் பிரித்தானியாவின் கிலாஸ்கோவில் நடைபெற்றபோதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புக்களும் சில எதிர்க்கட்சிகளும் தெரிவித்துள்ளன.
எனினும், இந்தக் கோரிக்கையை பிரித்தானிய அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யுத்த பாதிப்பு குறித்த சர்வதேச நிகழ்வொன்றில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையை அழைப்பதா என ஸ்கொட்லாந்துக்கான சர்வதேச மன்னிப்புச் சபை திட்டப் பணிப்பாளர் மார்க் பெவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என பிரித்தானிய மகாராணி அறிவித்ததை அடுத்து பிரித்தானியா சார்பில் எவரும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாதென வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Geen opmerkingen:

Een reactie posten