தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 mei 2013

யாழ்.இளவாலை பிரதேசத்தில் எலும்புக் கூடு மீட்பு


தமிழரின் கர்நாடக மாநிலத்தின் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர்களின் நண்பன் ஐ. ஆர். பெருமாள்
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 06:05.24 PM GMT ]
எதிர்வரும் திங்கட்கிழமை 5ம் திகதி நடைபெறவுள்ள இந்தியாவின் கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் பலமான ஆட்சியமைக்கும் நோக்கில் திரு பி. எஸ். எடியூரப்பா தலைமையிலான கர்நாடக ஜனதா கட்சி போட்டியிடுகின்றது.
மேற்படி தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் வாழும் அனைத்து தமிழ் பேசும் மக்களின் அன்புக்குரியவரும் சமூக சேவையாளரும் ஓய்வு பெற்ற இந்திய நிர்வாக சேவை அதிகாரியும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பெங்களுர் கிளையின் காப்பாளருமான திரு ஐ. ஆர். பெருமாள் போட்டியிடுகின்றார் என்ற இனிப்பான செய்தியை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு அறியத் தருவதில் மகிழ்ச்சியடைகின்றது.
திரு ஐ. ஆர். பெருமாள் அவர்கள் மேற்படி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக உலகத்; தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் திரு துரை கணேசலிங்கம் மற்றும் சர்வதேச ஊடகப் பொறுப்பாளர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் திரு ஐ. ஆர். பெருமாள் அடையப் போகும் வெற்றியானது உலகத் தமிழ் மக்கள் அடையப்போகும் வெற்றியாகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேற்படி அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
கர்நாடக மாநில சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடும் திரு ஐ. ஆர். பெருமாள் அவர்கள் முதல்வர் எடியூரப்பாவி;ன் ஆசி பெற்றவர். அத்துடன் ஈழத்தமிழ் மக்களுக்காக கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற அல்லது நடைபெற்றுவரும் போராட்டங்கள் அல்லது கூட்டங்களை பொறுப்பேற்று நடத்தும் தமிழ் பேசும் பெங்களுர் அன்பர்களில் இவர் மிகவும் முக்கியமானவர்.
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளையானது பெங்களுரில் சிறப்பான முறையில் இயங்கிவருவதற்கு இவர் முக்கிய காரணியாக உள்ளார். ஐ. ஏ. எஸ் அதிகாரியாக பெங்களுரில் நீண்ட காலம் பணியாற்றிய இவர் தனது பதவிக்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் முக்கிய பங்கு வகித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தின் சிவாஜி நகர் தொகுதியில் எடியூரப்பா தலைமையில் இயங்கும் கர்நாடக ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் தமிழ் மகன் திரு ஐ.ஆர். பெருமாள் பெறப்பபோதும் வெற்றியென்பது அந்த மாநிலத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போகும் பெறும் அங்கீகாரம் என்றே நாம் கருதுகின்றோம். ஏனென்றால் தமிழ் மாநிலம் அல்லாத கர்நாடகத்தில் தமிழ் மொழிக்கும் அங்கு வாழும் தமிழ் மக்களுக்கும் குறிப்பாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பெங்களுர்க் கிளைக்கும் மிகவும் பக்க பலமாக இருப்பவர் நமது வேட்பாளர் திரு திரு ஐ.ஆர். பெருமாள் அவர்களே ஆகும்.
ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் வெற்றி பெறவேண்டும் என்று கூட்டங்களையும் நடத்தி நிதியையும் சேகரித்து அத்தோடு மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் பெருமளவில் 2009ம் ஆண்டு இலங்கை அரசினால் படுகொலை செய்ய்பபட்டபோது கர்நாடக சட்டசபையில் அது பற்றிய விவாதங்களை நடத்தவும் நமது வேட்;பாளர் திரு ஐ.ஆர். பெருமாள் தன்னாலான முயற்சிகளை எடுத்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நல்லதோர் வேட்பாளருக்குரிய பூரணமான தகுதிகளைக் கொண்ட திரு ஐ.ஆர். பெருமாள் அவர்கள் எதிர்வரும் 5ம் திகதி திங்கட் கிழமை நடைபெறும் கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று கர்நாடக தமிழ் மக்களுக்கும் தமிழ் நாட்டில் மக்களுக்கும் மேலம் உலகத் தமிழ் மக்களுக்கும் பெருமையை தேடித்தருவார் என்று வாழ்த்துகின்றோம்.
இவ்வாறு உலகத்; தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கம் மற்றும் சர்வதேச ஊடகப் பொறுப்பாளர் கனடா வாழ் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்.இளவாலை பிரதேசத்தில் எலும்புக் கூடு மீட்பு
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 06:10.16 PM GMT ]
யாழ். இளவாலை பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் எலும்புக் கூடொன்று மீட்கப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளவாலை சீனிப் பந்தல் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் காணியொன்றிலிருந்து இன்று மாலை 4.30 மணியளவில் இந்த எலும்புக்கூடு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணி உரிமையாளரினால் மலசலகூடம் அமைப்பதற்கான குழியொன்று வெட்டும்போதே இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten