தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 mei 2013

அசாத் சாலியை வைத்தியசாலையில் பார்வையிட மனைவி, மகள், எம்.பி.க்களுக்கு அனுமதி மறுப்பு


இலங்கையின் மனித உரிமை மேம்பாட்டுக்கு பொதுநலவாய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கும்! - கமலேஷ் சர்மா
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 11:24.25 PM GMT ]
இலங்கை மக்களின் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் தேசிய வேலைத்திட்டங்களுக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
லண்டன் சென்றுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே கமலேஷ் சர்மா இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதவான் பிரியந்த ஆர்.பி.பெரேரா, ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர்களான தங்கவேல் கனகராஜா, எம்.ரோஹித்த பிரியதர்ஷன, அப்துல் கரீம் அப்துல் அசீஸ் உள்ளிட்ட குழுவினர் லண்டன் சென்றுள்ளனர்.
பொதுநலவாய மதிப்புக்களுக்கு அமைய இலங்கை மக்கள் அனைவரும் அமைதியாக வாழ்வதற்கும், சமமான உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவால் முன்னெடுக்கப்படும் தேசிய ரீதியான வேலைத்திட்டங்களுக்கும், முயற்சிகளுக்கும் பொதுநலவாய அமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என கமலேஷ் சர்மா கூறியுள்ளார்.
தனது இலங்கை விஜயத்தின் போது மனித உரிமைகள் குறித்துச் சுட்டிக்காட்டிய விடயங்கள் பற்றி கமலேஷ் சர்மா, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினருடனான சந்திப்பில் விரிவாக ஆராய்ந்துள்ளார்.
எதிர்வரும் ஆறு மாதங்களில் முன்னெடுக்கப்படவேண்டிய முக்கியமான இரண்டு அம்சங்கள் குறித்து இச்சந்திப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது. மனித உரிமை பாதுகாப்பு மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
லண்டன் சென்றிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் அங்கு நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் நல்லிணக்கம் தொடர்பான வட்டமேசை மாநாட்டிலும் கலந்துகொண்டுள்ளனர்.

அசாத் சாலியை வைத்தியசாலையில் பார்வையிட மனைவி, மகள், எம்.பி.க்களுக்கு அனுமதி மறுப்பு
[ சனிக்கிழமை, 04 மே 2013, 12:00.11 AM GMT ]
குற்றப்புலனாய்வு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை பார்வையிட அவரது மனைவி மகள் உள்ளிட்ட அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நேற்றிரவு மனைவி, மகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு தரப்பு அசாத் சாலியை பார்க்க அனுமதிக்காத நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதனை தொடர்ந்து அங்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, டாக்டர். ஜயலத் ஜெயவர்த்தன மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஆகியோருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
அத்துடன் அசாத் சாலி அனுமதிக்கப்பட்டுள்ள தேசிய வைத்தியசாலையின் 55ம் இலக்க வார்ட் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
"நீரிழிவு நோயாளியான நான் உணவு உண்ண மாட்டேன்" என அசாத் உண்ணாநோன்பு மூலம்  அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் அசாத் சாலியின் சட்டத்தரணியிடம், நிலைமை என் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என சட்டமா  அதிபர் தெரிவித்திருப்பதாக  தகவல் தெரிவிக்கின்றது.
அசாத் சாலியை கைது செய்து தேவையற்ற  சிக்கலை ஏற்படுத்த அரசு தலைமைக்கு  பெரியளவில் ஆர்வம் இல்லை. ஆனால் இதை செய்து அவரது வாயை மூடச் செய்யுங்கள் என  அரசில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள்தான் அரசு தலைமையிடம் பெரிதும் வலியுறுத்தி உள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten