தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 mei 2013

அரசியல்வாதியாக செயற்படும் கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர்! தகுதியானவரை நியமிக்கவும்!- கிழக்கு எல்லைகளற்ற மாணவர் ஒன்றியம்


கனடா வாழ் தமிழ் மக்களின் வளர்ச்சி கண்டு மகிழ்ச்சியடைவதாக ஒன்றாரியோ மாகாண முதல்வர் புகழாரம்
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 03:14.08 PM GMT ]
கனடாவின் மிகப் பெரிய மாகாணமான ஒன்றாரியோ மாகாணத்தில் தமிழ் மக்கள் ஆற்றிவரும் சேவைகள் நான் நன்கு மதிக்கின்றேன் என கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசின் முதல்வர் கெத்தலின் வெயின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்த வர்த்தக மேம்பாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இங்கு வாழும் தமிழ் பேசும் வர்த்தகப் பெருமக்கள் பலர் தாங்களும் வளர்ந்து தாங்கள் வாழும் மாகாணத்திற்கு கனடா நாட்டிற்கும் புகழ் தேடித்தந்துள்ளார்கள்.
அவர்களின் வளர்ச்சியானது, நமது மாகாணத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கின்றது என்பதை கூறிக்கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
அண்மைக் காலங்களில் ஒன்றாரியோ மாகாணத்தில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளும் தங்கள் முயற்சிகளிலும் குறிப்பாக கல்வியிலும் உயர்ந்த சாதனைகளைப் படைத்து வருகின்றார்கள்.
ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்திலும் தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தற்போது பணியாற்றுகின்றார்கள். இவர்களைப்போன்று மேலும் பலர் இங்கு அரசாங்க சேவையிலும் அரசியலிலும் ஈடுபாடு கொண்டு முன்னேற்றங்களைக் காணவேண்டும் என்று விரும்புகின்றேன் என்றார்.

அரசியல்வாதியாக செயற்படும் கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர்! தகுதியானவரை நியமிக்கவும்!- கிழக்கு எல்லைகளற்ற மாணவர் ஒன்றியம்
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 05:39.29 PM GMT ]
கல்குடா கல்விச் சமூகத்தின் செயற்பாடுகள் கடந்த பல வருடங்களாக மிகவும் மந்த கதியில் மாணவர்களின் எதிர்காலம் பற்றி எந்தவித தூர சிந்தனையுமின்றி செல்வதுடன், சிங்களம் திட்டமிட்டு சிதைக்கும் கல்வியில் உங்களது செயற்பாடுகளும் இதற்கு வலுவாக்குவதாக உணரக் கூடியதாயுள்ளது.
இவற்றை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என கிழக்கு எல்லைகளற்ற மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வலயக் கல்வி திணைக்களங்களில் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராசா என்பவர் ஒரு அரசியல்வாதியாக செயற்படுவதாக அதிபர், ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர் சுயநல உணர்வுடன் ஒரு சில அரசாங்க அரசியல்வாதிகளின் ஆசைகளை நிறைவேற்றிதான் பதவி உயர்வை பெறவேண்டும் என்ற வகையில் ஆசிரியர்கள், அதிபர்கள், அதிகாரிகளை தொடர்ச்சியாக பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இவரது நடவடிக்கையால் கல்வி வளர்ச்சி மிகவும் கீழ் நிலைக்கும் செல்லும் அபாயம் தோன்றியுள்ளது. அண்மையிலே கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளராகவே செ.ஸ்ரீகிருஸ்ணராஜா பொறுப்பேற்றிருந்தார்.
இவர் செங்கலடியில் நடைபெற்ற இரட்டை கொலை வழங்கில் பாடசாலை மாணவர்கள் சம்பந்தப்பட்டதாக சந்தேகப்பட்டு கைதாகி வெளியான செய்தியை வைத்து தமது பழைய கோபத்தையும், அரசியல் பேதத்தையும் செங்கலடி பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மீது காட்ட முனைந்துள்ளார்.
ஆனால் இவர் இப்பாடசாலை அதிபர், ஆசிரியர்களை கொலைக்கு காரணமாக சுட்டிக்காட்டி அவர்களை இப்பாடசாலையில் இருந்து தூக்கப் போகின்றேன் என்று பத்திரிகையொன்றில் குழந்தைப் பிள்ளைத்தனமாக வெளியிட்டிருந்தார்.
இவர் தற்போது ஒரு சர்வாதிகாரியாக கல்குடா வலயத்தில் செயற்படுகின்றார். அண்மையில் நடைபெற்ற அதிபர் ஒன்று கூடலில் தன்னைப்பற்றி பிழையாக யாராவது கதைத்தால் அறைக்குள் பூட்டி வைத்து கதவு வார்த்தடியால் சாத்தி அனுப்புவேன் என அதிபர்களுக்கு கூறியுள்ளார்.
இவர் பகிரங்கமாகவே இக்கூற்றை வெளிப்படுத்தியுள்ளார். இவர்கள் ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரியா? என பல அதிபர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் இவர் சொன்ன மாதிரியே செயலிலும் காட்டியுள்ளார்.
கிரான் மகா வித்தியாலயத்தில் உள்ள கணனி வள நிலைய முகாமையாளர் எஸ்.ஜெகதீஸ்வரன் என்பவரை தனது அடியாளான ஒரு பிரதிக் கல்விப் பணிப்பாளர் அனந்தரூபனை அனுப்பி மிக கடுமையாக தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் இன்றும் எடுக்கப்படவில்லை. இவரை கல்குடா வலயத்துக்கு கொண்டு வந்து கருணா அம்மானின் பிறந்த ஊரில் இவ்வலயக் கல்விப் பணிப்பாளரின் அட்டூழியம் இடம்பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி, அண்மையில் நடைபெற்ற அதிபர்களுக்கான கூட்டம் ஒன்றில் தனது வலயத்துக்கு ஒற்றர்கள் பலரை தான் நியமித்துள்ளதாகவும் இந்த ஒற்றர்கள் அதிபர், அசிரியர்கள், அதிகாரிகள் மத்தியில் உள்ளதாகவும், இவர்களுக்கு விசேட சலுகைகள், விடுமுறைகள் தான் வழங்க உள்ளதாகவும், இவ் ஒற்றர்கள் அதிபர். ஆசிரியர்கள், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பற்றி தரும் தகவலின் அடிப்படையில் அதிபர்களை தண்ணீர் இல்லாத காட்டுக்கு அனுப்ப போவதாகவும் அதிபர் கூட்டத்தில் அறிவித்துள்ளார். இது ஒரு திணைக்கள நடைமுறையா என பலரும் ஆச்சரியப்படுகின்றனர். 
ஒரு கூட்டத்தில் குறைந்தது 100 தடவையாவது ஆளுனரை உச்சரிப்பார்.  அதனூடாக அதிபர்களையும் பயமுறுத்துகின்றார். 
இவர் ஒவ்வொரு கூட்டங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புகளை வைத்துள்ளவர்களை வீட்டுக்கு அனுப்புவேன் என அதிபர் கூட்டங்களில் பகிரங்கமாகவே சவால் விடுகின்றார்.
அதுமட்டுமின்றி இவர்களை பாடசாலையின் எந்நிகழ்வுக்கும் அழைக்ககூடாது இவர்களிடமிருந்து எந்த உதவியும் பெறக்கூடாது என எச்சரிக்கை விடுகின்றார். ஒரு வலயக் கலவிப் பணிப்பாளரின் ஒழுங்கற்ற சொற்பதங்கள், கருத்துக்களை பார்த்து அதிபர்கள் சிரிக்கின்றனர். ஆனால் கருணா அம்மான் தீர்க்கதரசி என்று பல தடவை கூறித்திரிகின்றார்.
ஆனால் பிள்ளையானை கல்வி அறிவு குறைந்த குள்ளன் என கூறுகின்றார். அதுமட்டுமின்றி அமிர் அலிதான் எனது தெய்வம் எனவும் பலரிடம் கூறியுள்ளார். தமது இருப்பை பாதுகாத்துக் கொள்ள தமிழ் இனத்தினையே விற்கின்றார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலிலும், கிழக்கு மாகாண சபை தேர்தலிலும் ஓட்டமாவடியைச் சேர்ந்த அமிர் அலியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற நோக்கில் அவரிடம் பல இலட்சம் பணம் பெற்றுக் கொண்டு மட்டக்களப்பு நகர பகுதி உட்பட் பல இடங்களில் கட்டை காற்சட்டையுடன் ரிசேட் போட்டுக் கொண்டு நடு இரவு, அதிகாலை வேலைகளில் பசை வாளியுடன் அமிரலியின் நோட்டீசுகளை ஒட்டும் செயற்பாட்டியில் தீவிரமாக ஈடுபட்டார். 
இவர் மட்டக்களப்பிலுள்ள பாடசாலைக்கு முன்பாக மதில்களில் தேர்தல் காலத்தில் அமிரலியின் நோட்டீசை ஒட்டும் போது பொதுமக்களால் துரத்தப்பட்டார். ஆனால் கல்குடா கல்வி வலயத்தின் கீழ் கல்வித் தேவைகள் மிக அதிகம்.
இதனை தரமான வலயக் கல்விப் பணிப்பாளர்களாலேயே சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியும். இவரை போன்ற கோமாளித்தனமானவர்களை கல்விப் பணிப்பாளராக வைத்திருந்தால் இங்கு கல்வி வளர்ச்சி மேலும் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது.
எனவே இவ்வாறான தரமற்ற வலயக் கல்விப் பணிப்பாளரை கிழக்கு மாகாணத்தில் இருந்து விரட்டிவிட்டு தரமான வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிக்க முன்வரவேண்டும் என வேண்டுகின்றோம்.
வலயக் கல்விப் பணிப்பாளர் பற்றி பல செய்திகள் மிகவிரைவில் பல ஊடகங்களிலும் வெளியிடப்படும் என்பதை கூறிக்கொள்கின்றோம். இவரது மேற்தரப்பட்ட விடயங்களை ஆராயும் போது மேலும் பல விடயங்களை பலரும் அறிய முடியும் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.
எல்லைகளற்ற மாணவர் ஒன்றியம்
உட்துறைமுக வீதி
திருகோணமலை
கிழக்கு மகாணம்

Geen opmerkingen:

Een reactie posten