[ வியாழக்கிழமை, 16 மே 2013, 11:34.13 AM GMT ]
லெபனானில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் முகமாக ஐ.நா இடைக்கால அமைதிகாக்கும் படையில் சேவையாற்றும் இலங்கையின் சிங்ஹ படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த படைப்பிரிவைச் சேர்ந்த 150 இலங்கை இராணுவீரர்களுக்கு அவர்களது சேவைக் கால நிறைவை முன்னிட்டு மிகவும் மதிப்பும் பெறுமதியுமிக்க ஐக்கிய நாடுகளின் பதக்க விருது வழங்கும் விழா அன்மையில் லெபனானில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சிங்ஹ படைப் பிரிவின் கேனல் மேஜர் ஜெனரல் போனிபேஸ் பெரேரா இராணுவத் தளபதியைப் பிரதி நிதித்துவப்படுத்தும் முகமாக கௌரவ அதிதியாக கலந்து கொண்டதுடன் அவர் இராணுவ மரியாதையுடனும் கலாசார பாரம்பரியங்களுடனும் வரவேற்கப்பட்டார்.
ஐ.நா இடைக்கால அமைதிகாக்கும் படையில் இலங்கை இராணுவத்தின் சிங்ஹ படைப் பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகளும்- 140 படைவீரர்களும் சேவையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்திற்கே முழு அதிகாரம்! கட்சி தாவும் உறுப்பினரின் பதவி ரத்து! ஐ.தே.க.வின் புதிய அரசியல் யாப்பு
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 11:58.51 AM GMT ]
ஜனாதிபதி பதவியை சுயாதீனமாக்கும் வகையிலும் அதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கு பகிரப்படும் வகையிலுமான புதிய அரசியலமைப்பிற்கான யோசனையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
ராஜகிரியவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டுள்ள புதிய அரசியலமைப்பின் பிரகாரம் வட்டார அடிப்படையில் 125 பாராளுமன்ற உறுப்பினர்களும் விகிதாசார முறைப்படி 100 உறுப்பினர்களுமாக 225 பேர் நியமிக்கப்படுவர் எனவும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சு சபைக்கு 25 பேரும் பிரதி அமைச்சர்கள் 30 பேரும் நியமிக்கப்படுவர்.
தற்போதைய யாப்பின் படி பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்திற்காகவும், பதவிக்காகவும் கட்சி விட்டு கட்சி தாவுகின்றனர். இந்த யாப்பில் அவ்வாறு கட்சி தாவினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ரத்துச் செய்யப்படும் வண்ணம் திருத்தம் செய்யப்படவுள்ளது.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த காலத்திற்குள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளியிட வேண்டும். அவ்வாறு அவர்கள் அதனை வெளியிடத் தவறும் பட்சத்தில் அவர்களது பதவி ரத்துச் செய்யப்படும்.
இதன் பிரகாரம் பாராளுமன்றத்திற்கே முழு அதிகாரமும் வழங்கப்படவுள்ளது. எந்த ஒரு நாட்டிலும் காணப்படாத அதிகாரமே நம் நாட்டு அரசியல் யாப்பின் படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இதனை நாம் நிறைவேற்ற நாட்டு மக்களிடம் இதற்கான ஆதரவைப் பெற வேண்டும்.
குறிப்பாக காணி, சுகாதாரம் மற்றும் கல்விக் கொள்கைகள் மாற்றியமைக்கப்படும்.
தற்போதுள்ள அரசியலமைப்பில் அரசாங்கமும் அதனைச் சுற்றியுள்ளவர்களுமே அதனை அனுபவிக்க முடியும்.
ஆனால் நாம் முன்வைத்துள்ள அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் அதனை அனுபவிக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தற்போதுள்ள சா்வ அதிகாரங்களுடைய நிறைவேற்று ஜனாதிபதி அரசியலமைப்பு முறைமை ஐக்கிய தேசியக் கட்சியினாலேயே கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten