வடமாகாண தேர்தலுக்கு போட்டியாளர்கள் தேவை! தமிழினி உட்பட முன்னாள் புலி உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட ஆர்வம்!
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 09:52.05 AM GMT ]
ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து இவர்களுக்கு எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட அரசாங்கம் வாய்ப்பளிக்கும் என்றும் கூறினார்.
எனினும் புலம் பெயர் தமிழ் மக்களில் அனேகர் இலங்கையில் அமைதி நிலவுவதை விரும்புவதில்லை என்றும் தமது சுய நலன்களுக்காக மீண்டும் ஒரு யுத்த சூழலை உருவாக்கவே அவர்கள் வெளிநாடுகளில் இருந்து முயன்றுகொண்டிருக்கின்றனர் என்றும் சந்திரசிறி கஜதீர சுட்டிக்காட்டினார்.
எனினும் புலம் பெயர் தமிழ் மக்களில் அனேகர் இலங்கையில் அமைதி நிலவுவதை விரும்புவதில்லை என்றும் தமது சுய நலன்களுக்காக மீண்டும் ஒரு யுத்த சூழலை உருவாக்கவே அவர்கள் வெளிநாடுகளில் இருந்து முயன்றுகொண்டிருக்கின்றனர் என்றும் சந்திரசிறி கஜதீர சுட்டிக்காட்டினார்.
மேலும் மாகாணசபை தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறையின் மகளிர் பிரிவு தலைவரான தமிழினியும் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது.
செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் தேர்தலில் தமிழினியை நிறுத்த சில கட்சிகள் முயல்வதாக தெரிகிறது. அவரும் தேர்தலில் களம் இறங்க முடிவு செய்திருக்கிறார். அவர் விடுதலையான பிறகு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் தமிழினிக்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்படக் கூடும் எனவும் தெரியவருகின்றது.
மேலும் நடைபெறவுள்ள வடக்கு மாகாண கவுன்சில் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், அமைச்சர் பசில் ராஜபட்ச செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாண கவுன்சில் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.
சமுதாய மேம்பாட்டுக்காக பாடுபடவும், அரசியலில் ஈடுபடவும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள், சமூக அமைப்பின் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.
வரும் செப்டம்பர் மாதம் வடக்கு மாகாண கவுன்சிலுக்கு தேர்தல் நடைபெறும் என மகிந்த ராஜபக்ஷ ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த கவுன்சில் மற்ற மாகாணங்களோடு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தாலும், தேர்தல் நடத்தப்படுவது இதுவே முதன்முறை. எனினும், அங்கு தேர்தலை நடத்துவதற்கு ஜெ.ஹெச்.யு. மற்றும் என்.எஃப்.எஃப். ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடக்கு முறையை நோக்கியே அரசாங்கம் நகர்கின்றது: தயா கமஹே
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 09:54.11 AM GMT ]
மின் கட்டணத்தை உயர்த்தியது அரசாங்கத்தின் சூழ்ச்சியாகும். அரசாங்கத்தின் மக்கள் எதிர்ப்பு செயற்பாடுகளை ஊடகங்கள் ஊடாக தெரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இல்லாதொழிப்பதே மின் கட்டண அதிகரிப்புக்கான சூழ்ச்சிகளில் ஒன்றாகும்
பயங்கரவாதம் இலங்கையில் நிலவிய போது கூட சுதந்திரமாக நாம் இயங்கினோம். வடக்கில் மட்டுமே பிரச்சினைகள் அதிகமாக இருந்தன.
ஆனால் இன்று நாடே பிரச்சினைகளை சந்திக்கின்றது. அசாதாரணமான விலையேற்றத்தினால் மக்கள் சுதந்திரத்தினையும் உரிமையையும் இழந்து தவிக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று டியூசன் வகுப்புக்கு பிள்ளைகளை அனுப்புவது முதல் சீனி வாங்குவது வரை அதிகரித்த விலையேற்றத்தால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
பஸ் கட்டணம், கேஸ் விலை என்றே அன்றாடம் மக்கள் தலையில் விலையேற்ற சுமை இறக்கி வைக்கப்படுகின்றது. ஆனால் அரசாங்கம் தேசத்திற்கு மகுடம் என ஊழல் செய்வதோடு கார் ரேஸ்களையும் களியாட்டங்களையும் நடாத்தி மகிழ்கின்றது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten