[ திங்கட்கிழமை, 13 மே 2013, 01:28.57 PM GMT ]
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மாவட்ட அமைப்பாளரான அருணாசலம் வேழமாலிதன் மற்றும் சிறிதரனின் செயளாலரான பொன்காந்தனும் பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரினால் தை மாதம் கைது செய்யப்பட்டு கடந்த நான்கு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கைதுகளும் தடுப்புக்காவலும் சட்டரீதியற்றதெனவும் அவர்களை விடுதலை செய்யும்படியும் சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா இன்று இரண்டு அடிப்படை மனித உரிமை மனுக்களை இன்று உயர் நீதிமன்றில் தாக்கல் செய்தார்.
இறுதிக்கட்ட போரில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் 4ம் ஆண்டு நினைவு நிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி காலை 10 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற உள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் பதில் தலைவர் எம்.எம் ரதன் தெரிவித்தார்.
மனுதாரரான சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா தமது மனுவில் பயங்கவாதத் தடைப்பிரிவின் பொறுப்பதிகாரி, பூசா தடுப்பு முகாமின் பொறுப்பதிகாரி், பயங்கவாதத் தடைப்பிரிவின் அத்தியட்சகர், பொலிஸ் மாஅதிபர் என்.கே இளங்கக்கோன், பாதுகாப்புப் செயளாளர் கோதபாய ராஜபக்ஸ, சட்டமா அதிபர் ஆகியோரை பிரதிவாதியாக பெயர் குறிப்பிட்டு இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மனுக்களில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தை மாதம் 12ஆம் திகதி 2மணி 30நிமிடமளவில் மூன்று வாகனங்களில் வந்த 20வது பயங்கரவாத தடைப்பிரிவுப் பொலிசார் ஆயுதங்கள் கையிலும் தோளிலும் பைகளுடன் அறிவகம் என அழைக்கப்படும் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின்; காரியாலயத்திற்கு உள்ளே நுழைந்து அங்கு கடமையிலிருந்த மாவட்ட அமைப்பாளரான அருணாசலம் வேழமாலிதன் லட்சுமி காந்தன் தட்டெழுத்தாளர் ஆகியோரிடம் இராணுவத்திற்கு தமிழ் பெண்களை இணைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் சிறிதரனின் அலுவலகமா என கூறியபடி காரியாயத்திற்குள் உட்புகுந்த வேளையில் வசந்தம், டான், சிகரம் தொலைக்காட்சியை சேர்ந்த மூவருடன் தினமுரசு பத்திரிகையை சார்ந்த ரொசாங்கன் என்பவரும் காரியாலத்திற்குள் கமரா தொலைத் தொடர்பு சாதனங்களுடன் உட்புகுந்துள்ளனர்.
காரியாலயத்திற்கு உட்புகுந்த பொலிசார் யார் வேலமாலிதன் எனக்கேட்டதுடன் முதலாவது பிரதிவாதியான பயங்கவாதத் தடைப்பிரிவின் பொறுப்பதிகாரி அருணாசலம் வேழமாலிதனை கைது செய்து வாகனத்தில் ஏற்றியபின்னர் வேலமாலிதனை அவசரகால பயங்கரவாத சட்டங்களின் கைது செய்ததாக ரீசிற் ஒன்றை லட்சுமி காந்தனிடம் வழங்கியுள்ளனர்.
தை மாதம் 12ஆம் திகதி அருணாசலம வேழமாலிதனை கைது செய்து ஜீப் வண்டியில் ஏற்றிய பின்னர் பொன்னம்பலம் இலட்சுமி காந்தனை பயங்கரவாதத் தடைப்பிரிவின் சில பொலிசார் விசாரணை செய்த அதேவேளை மற்றைய பொலிசார் காரியாலயத்தில் அமைந்துள்ள அறைகளை சோதனையிட்ட பின்னர் தாங்கள் தேடுதலின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக கையளவு வெடிமருந்துகள் ஆபாச சிடிக்களை மேலும் ஆணுறைகளை லட்சுமி காந்தனிடம் காட்டியதுடன் பலாத்காரமாக ஆணுறை உட்பட தாங்கள் கண்டுபிடித்ததாக கொண்டுவரப்பட்ட பொருட்கள் அனைத்தையும் லட்சுமி காந்தனின் கையில் கொடுத்து புகைப்படம் எடுத்ததுடன் பலாத்காரமாக சில சிங்களமொழியில் எழுதப்பட்டிருந்த சில ஆவணங்களில் கையெழுத்தும் பெற்றுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கிளிநொச்சி காரியாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டதென கூறப்பட்ட பொருட்களையும் கைது செய்யப்பட்ட வேலமாளிதனையும் பத்திரிகையாளர்களையும் கூட்டிக்;கொண்டு சென்ற மூன்றாவது நாள் லட்சுமிகாந்தனை வைத்து பொலிசாரால் எடுக்கப்பட்ட படங்கள் துண்டுப்பிரசுரத்தில் அச்சிடப்பட்டு கிளிநொச்சி நகரத்தில் பொது மக்களிடையே வினியோகிக்கப்பட்டுள்ளது
2013ஆம் ஆண்டு தைமாதம் கொழும்பு வந்த லட்சுமிகாந்தன் தை மாதம் 12ஆம் திகதி கிளிநொச காரியாலயத்தில் நடந்த விடயங்களையும் பொலிசார் நடந்து கொண்ட முறை பற்றியும் தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு மனித உரிமை ஆணைக்குளு தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்;
மனித உரிமை ஆணைக்குளுவிற்கு முறைப்பாடு செய்து மூன்று நாட்களின் பின்னர்;19-01-2013ஆம் திகதி பொன்னம்பலம் லட்சுமி காந்தனை பயஙகரவாதத் தடைப்பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்
மனுதாரரான கௌரிசங்கரி தவராசா தனது மனுக்களில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது தான் நன்கு அறிந்தவரையிலும் தனக்கு கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தலின்படியும் தை மாதம் 12ஆம் திகதி கிளிநொச்சி காரியாலயத்திலிருந்து எந்தப் பொருட்களும் பொலிசாரினால் கண்டுபிடிக்கப்படவில்லையெனவும்; குறிப்பிட்டுள்ளதுடன்
48ஆம் இலக்க 1979 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சட்டரீதியற்ற முறையில் கைது செய்யப்பட்டு; பாதுகாப்பு அமைச்சரின் தடுப்புக் காவல் உத்தரவிற்கமைய தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தடுப்புக்காவல் கைதிகள் பொலிசாரினால் சித்திரவதைக்கு உட்பட்டுள்ளார்கள் என நம்பகத்தன்மையாக அறியக்கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன்; பொலிசாரின் இந்த நடவடிக்கைகள் சட்டரீதியற்றதெனவும் அடிப்படை மனித உரிமை மீறலாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சித்திரவதையிலிருந்து சுதந்திரத்துக்கான அடிப்படை உரிமை, சட்டத்தின்முன் சமத்துவம் மற்றும் சமமான பாதுகாப்புக்களுக்கான உரிமை, சாகியம், மொழி, அரசியல் கருத்து என்பன காரணமாக பாரபட்சம் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை, வெளியீட்டுச் சுதந்திரம் உட்பட பேச்சு மற்றும் கருத்து வெளியிடும் சுதந்திரம் ஆகியவற்றுடன் பலவந்தமாகக் கைதுசெய்யப்படுதல் மற்றும் தடுத்துவைக்கப்படுவதிலிருந்து சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதுடன்; சட்த்திற்கு முரனான இந்தக் தடுப்புக்காவல் உத்தரவு நீக்கப்பட்டு தடுப்புக் காவலில் உள்ள வேழமாலிதன்இ பொன்காந்தன் ஆகியவர்கள் விடுதலை செய்யப்படுவதுடன் நீதிமன்றம் கருதும் நியாயமான நஷ்ட ஈடு வழங்கப்படவேண்டும் எனவும் இம் மனுக்களில் மேலும் கோரப்பட்டுள்ளது. என இரு மனுதாரர் சார்பிலும் மனுக்களை தாக்கல் செய்த சிரேஸ்ர சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா உறுதிப்படுத்தினார்.
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுக்கு அஞ்சலி நிகழ்வு வவுனியாவில் அனுட்டிக்க ஏற்பாடு: எம்.எம் ரதன்
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 01:35.10 PM GMT ]
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அதுதான் எமது போராட்டத்தின் மற்றுமோர் ஆரம்பம்.
ஒரு நாட்டை போரிலே வெற்றி கொண்டது போல் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நிகழ்வை சிறிலங்காதேசம் வெற்றிவிழாவாக கொண்டாடுகிற இச்சூழலில் ஒவ்வொரு தமிழ் பேசும் மக்களும் உண்மை நிலையை உணர்ந்து கொண்டு எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்த தயாராக வேண்டும்.
தமிழினத்தின் வரலாற்றில் ஆறாத வடுக்களாய் தீராத துயரமாய் மனங்களின் நிழல் கொண்டிருக்கும் 2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பேரவலம் ஒட்டுமொத்த தமிழினத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.
கொத்துக் கொத்தாய் எமது மக்கள் கொன்று குவிக்கப்பட்டது எவராலும் மறக்க முடியாது. இதனடிப்படையில் எங்கள் விடுதலைக்கு வலுச்சேர்க்கும் வகையில் எமது போராட்டத்தின் இறுதி இலட்சியத்தை நோக்கி நகர்ந்து, இறுதியில் இராணுவத்தால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களின் ஆத்மசாந்திக்காகவும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக எதிர்வரும் 18ம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு நகரசபை மண்டபத்திற்கு அனைத்துப் பொதுமக்களையும் கலந்து கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten