தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 16 mei 2013

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்!- சர்வதேச மன்னிப்புச் சபை


பொதுநலவாய நாடுகள் அமைப்புடன் ஐ.தே.க பேச்சுவார்த்தை (செய்தித் துளிகள்-4)
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:16.52 AM GMT ]
பொதுநலவாய நாடுகள் அமைப்புடன் ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளை நாட்டில் அமுல்படுத்துவது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் கொள்கைகளை நாட்டில் அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்துடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துவது பொருத்தமானதல்ல.
ஏனைய எதிர்க்கட்சிகளுக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை நடாத்துவது தொடர்பில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் கிரியல்ல மற்றும் மங்கள சமரவீர ஆகியோர் கடிதமொன்றை தயாரித்துள்ளனர்.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டின் போது வெளிப்படைத்தன்மையுடன் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை!- ஜே.வி.பி
ஐக்கிய தேசியக் கட்சியுடன் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.
இவ்வாறான இணக்கப்பாடு என்பது வெறும் கனவே என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டண உயர்விற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் நடைபெறும் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தோம். எனினும், இது அரசியல் கொள்கை ரீதியான இணக்கப்பாடு கிடையாது. ஒரே அரசியல் மேடையில் கருத்துக்கள் வெளியிடப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தாயை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆளும் கட்சி பிரதேசசபை உறுப்பினர் கைது
இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரந்தெனிய பிரதே சபையின் உறுப்பினரை எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு அல்பிட்டிய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இங்குருகெட்டிய என்னும் இடத்தைச் சேர்ந்த 40 வயதான ஜயந்த சுரவீர என்ற பிரதே சபை உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரதேச சபை உறுப்பினர், ஆடைகளை கிழித்து மிகவும் கொடூரமான முறையில் தம்மைத் தாக்கிய பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சம்பவத்தின் போது கிழிந்த ஆடைகளையும் குறித்த பெண் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்
சட்ட விரோதமானை முறையில் இறக்குமதி செய்யப்பட்ட நான்கு அதி சொகுசு வாகனங்களை சுங்க திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ஜப்பானில் இருந்து இவை கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவற்றில் சொகுசு வான் ஒன்றும் கார் ஒன்றும் உள்ளடங்குகின்றன. அவை அனைத்தும் ஹம்பாந்தொட்டை துறைமுகத்தின் ஊடாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
சைக்கில் இறக்குமதி செய்யப்படும் போர்வையில் இவை கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்!- சர்வதேச மன்னிப்புச் சபை
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 03:35.23 AM GMT ]
இலங்கையின் யுத்த குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச தரத்திலான விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு, மன்னிப்பு சபை எழுதியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் 23வது மாநாட்டு இந்த மாதம் 27ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியாக வலியுறுத்தப்பட்ட நிலையிலும், அரசாங்கம் மனித உரிமைகள் விடயங்களில் தோல்வி கண்டுள்ளது.
இந்த நிலையில் சர்வதேச தரத்தினாலான விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் இருந்து பாதுகாப்பு கோருகின்றவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை சரியான முறையில் செயற்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை தமது கடிதத்தில் கோரியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten