தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 16 mei 2013

தமிழக வாழ் இலங்கை அகதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்- இந்தியர் ஒருவர் யாழில் கைது


சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 400 இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அழைப்பு
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 03:39.20 AM GMT ]
சவூதி அரேபியாவில் சட்ட விரோதமான முறையில் தங்கி இருந்த 400க்கும் அதிகமான இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணிமனை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு சட்ட விரோதமான முறையில் அங்கு தங்கியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலத்துக்குள்ளேயே அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பணியகத்தின் அதிகாரி மங்கள ரந்தெனிய உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த காலப்பகுதிக்குள் அபராதம் இன்றி அவர்களை நாட்டுக்கு அழைத்து வர முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பணியாளர்களே அவர்களுக்கான பயண சீட்டினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ் இலங்கை அகதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்- இந்தியர் ஒருவர் யாழில் கைது
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 04:00.42 AM GMT ]
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கான நலன் மேம்பாட்டு திட்டங்களின் ஒருகட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் அகதி மாணவர்களுக்கான பாடசாலை பாடநூல்கள், உணவு, சீருடை போன்றவையும் வழங்கப்படவுள்ளதான த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 66 ஆயிரத்துக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட அகதிகள் உள்ளனர். அவர்களில் 1530 பேர் இலங்கை திரும்பியுள்ளனர்.
சுற்றுலா வீசாவில் நாட்டுக்குள் பிரவேசித்து வர்த்தகத்தில் ஈடுபட்ட இந்தியர் கைது
சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து வர்த்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்தியர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பகுதியில் வைத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு தொகுதி ஆடையும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்படும் போது அவரது வீசா காலவும் நிறைவடைந்திருந்தது. இன்று அவர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten