முசலியில் சிங்கள குடியேற்றத்தை தடுக்க தமிழ்,முஸ்ஸிம் மக்களின் பிரதிநிதிகளை சந்திக்க த.தே.கூ தீர்மானம்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 01:39.16 AM GMT ]
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன் அரசாங்கம் சிங்கள குடியேற்றங்களை மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
சுமார் 5 ஆயிரம் குடும்பங்களை குடியமர்த்த நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த நிலையில் யுத்தத்தினால் பாதீக்கப்பட்டு இடம் பெயர்வுகளை சந்தித்த முசலி பிரதேசத்தில் உள்ள தமிழ்,முஸ்ஸிம் மக்கள் இது வரை உரிய முறையில் மீள் குடியேற்றப்படவில்லை.
அவர்கள் காடுகளிலும்,தற்காலிக கொட்டில்களிலும் தொடர்ந்தும் அகதி வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் முசலியில் சிங்கள மக்களை குடியமர்த்தும் முகமாக முதற்கட்டமாக 1500 குடும்பங்கள் பேரூந்துகளில் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் இங்கு தற்காலிக கொட்டில்களை அமைக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் மீள் குடியேற்றங்கள் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வரிவாக ஆராயவுள்ளது.
தமிழ்,முஸ்ஸிம் மக்களின் பிரதி நிதிகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெகு விரைவில் அழைத்து இந்த சிங்கள குடியேற்றம் தொடர்பில் ஆராய்ந்து இந்த சிங்கள குடியேற்றத்திற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை என்ற போர்வையில் நாட்டை சீர்குலைக்க முயற்சி!- கிழக்கு மாகாண ஆளுநர்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:09.09 AM GMT ]
மனித உரிமை என்ற போர்வையில் நாட்டை சீர்குலைப்பதற்கு சிலர் முயற்சி எடுத்து வருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்யும் போது பல்வேறு சவால்களை எதிர்நோக்க நேரிடும். எனினும் மனித உரிமை என்ற லேபிளைப் பயன்படுத்தி நாட்டின் அபிவிருத்திக்கு தடை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது.
இவ்வாறான சதித் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதானது உயிர்த் தியாகம் செய்த படைவீரர்களை இழிவுபடுத்தும் வகையில் அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten