தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 mei 2013

அவுஸ்திரேலிய சென்றவர்களின் வீடுகளுக்குச் சென்று, பணம் வசூலிக்கும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர்!


அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் ஆட்களை அனுப்பியதற்கான பணத்தை வசூல் செய்வதில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
படகு மூலமாக ஆட்களை அனுப்பிய முகவர்கள், அதற்கான பணத்தினை அறவீடு செய்வதற்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரை பயன்படுத்துவதாக அவுஸ்ரேலியா சென்றுள்ளவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று படகு மூலம் அவுஸ்ரேலியா சென்றிருந்தனர். இவர்கள் சிறியளவு பணத்தையே போகும்போது கொடுத்துவிட்டு மிகுதிப் பணத்தை அவுஸ்ரேலியா சென்றவுடன் தனது உறவினர்கள் தருவதாகவும் கூறியிருந்தனர்.
குறித்த குடும்பத்தினர் அவுஸ்ரேலியா சென்று தொலைபேசியில் பேசியவுடன், அந்தக் வீட்டுக்கு சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர், அங்கிருந்த வயதான மூதாட்டியிடம் பணத்தை உடனடியாக கொடுக்கும்படி கடுமையாக பேசியதுடன் தற்போது பணம் இல்லை என்பதால் குறித்த வீட்டினுடைய உறுதியை அடைமானமாக எடுத்துச் சென்றுள்ளனர்.
குறித்த வீட்டுக்கு தொடர்ச்சியாக செல்லும் புலனாய்வுத்துறையினர், மூதாட்டியையும் அவருடைய உறவினர்களையும் பணத்தை உடனடியாக கொடுக்காவிட்டால் பயங்கரவாத பிரிவின்கீழ் கைது செய்யப் போவதாக எச்சரித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten