கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை விடுதலை செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு விடுதலை செய்யப்படாத பட்சத்தில் சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும் என மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தை விமர்சிப்பதால் ஏற்படும் நிலைமையை அசாத் சாலியின் கைது உணர்த்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய வலயத்திற்கான பிரதிப் பணிப்பாளர் பொலி ட்ரஸ்கொட் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கும் திட்டத்தின் புதிய இரை தான் அசாத் சாலி எனவும் பொலி ட்ரஸ்கொட் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அச்சுறுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறை ரீதியிலான தாக்குதல் சம்பவங்களுக்கு ஊடகவியலாளர்கள், நீதிமன்றம், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சாலி போன்ற அரசியல்வாதிகள் முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten