தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 19 mei 2013

பொதுநலவாய மாநாடு தொடர்பில் பிரசாரங்களை மேற்கொள்ள இலங்கை தீர்மானம்


வடக்கு தேர்தலுக்கு எதிராக பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளன (செய்தித் துளிகள்)
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:52.38 AM GMT ]
வடக்கு தேர்தலுக்கு எதிராக பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கில் தேர்தல் நடாத்துவதனை தடுக்குமாறு கோரி தேசிய சுதந்திர முன்னணி இந்த கோரிக்கையை முன்வைக்க உள்ளது.
வடக்கு தேர்தல்களை ரத்து செய்யுமாறு கோரி பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. பொதுமக்களின் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.
கொழும்பில் நடைபெறவுள்ள இந்த ஆரம்ப நிகழ்வில் கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக காணி, காவல்துறை அதிகாரங்கள் ரத்து
வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக 13ம் திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் ரத்து செய்பய்பட உள்ளன.
ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளினால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
காணி அதிகாரங்களை முழுமையாகவும், காவல்துறை அதிகாரங்களை பகுதியளவிலும் ரத்து செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
எனினும், காவல்துறை அதிகாரங்களையும் முழுமையாக ரத்து செய்யுமாறு சில கூட்டணி கட்சிகள் கோரியுள்ளன.
இதேவேளை, காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் ரத்து செய்யப்பட்டால் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடாத்தத் திட்டமிட்டுள்ளது.
அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தத் திட்டம்
அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த நாட்டுக்கு மாகாணசபை முறைமை அவசியமா இல்லையா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
மாகாணசபை முறைமை இந்த நாட்டுக்கு பொருத்தமற்றது என தமிழ்ஸ் போ ஸ்ரீலங்கா என்ற அமைப்பின் தலைவர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
புத்திஜீவிகள் உள்ளிட்ட 300 பேர் கையொப்பமிட்ட மகஜர் ஒன்றையும் அருண் தம்பிமுத்து ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
மாகாணசபை முறைமை தேவைதானா என்பது குறித்து சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துமாறு அருண் தம்பிமுத்து கோரியுள்ளார்.
இந்த கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவுள்ளது. மாகாணசபை ஒர் வெள்ளை யானை எனவும் மாகாண சபைகளை கொண்டு நடாத்த வருடாந்தம் 400 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணத்தை மக்கள் அபிவிருத்திக்காக செலவிட முடியும் எனவும், இதனால் மக்களின் வாழ்க்கைச் செலவை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சர்வஜன வாக்கெடுப்பிற்கு ஆளும் கட்சியின் முக்கிய தமிழ் அமைச்சர்கள் ஆதரவளிக்க உள்ளனர்.
வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய மாநாடு தொடர்பில் பிரசாரங்களை மேற்கொள்ள இலங்கை தீர்மானம்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:07.36 AM GMT ]
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு தொடர்பில் பிரசாரங்களை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது
இதன் ஒரு கட்டமாக லண்டனில் இந்த வாரத்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தில் இலங்கை பங்கேற்கவுள்ளது என்று வெளியுறவு அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பொதுநலவாய மாநாட்டு பிரசாரக் குழுவுக்கு தகவல் அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் தலைமையேற்பதாக அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை எந்த ஒரு நாடும் புறக்கணிக்குமானால் அது அந்த நாட்டுக்கு நல்லதல்ல என்று அமுனுகம சுட்டிக்காட்டிள்ளார்

Geen opmerkingen:

Een reactie posten