[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 03:34.53 AM GMT ]
மாகாணசபை தேர்தலின் போது வடக்கில் இராணுவ பிரசன்னம் குறித்து தேர்தல் கண்காணிப்பாளர்கள் தமது அச்சத்தை வெளியிட்டுள்ளனர்.
கபே அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் இது குறித்து கருத்துரைக்கையில், வடக்கு மாகாண சபைத் தேர்தலின்போது அரசியல் சுதந்திரம், ஊடக சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் என்பன அவசியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்க தெரிவித்தார்.
வடக்கில் இன்று பொதுமக்கள் செல்லமுடியாத இடங்கள் உள்ளன அங்கு தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளமுடியாத நிலை உள்ளது.
இந்தநிலையில் பொதுமக்கள் ஒன்றுக்கூடுவது போன்ற விடயங்கள் அதிக இராணுவ பிரசன்னத்துக்கு மத்தியில் எவ்வாறு சாத்தியமாகும் என்று கீர்த்தி தென்னக்கோன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராட்சியின் கருத்துப்படி, வடக்கில் உள்ள பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு சவால் விடுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அதிக இராணுவ பிரசன்னம் என்பது வாக்காளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் என்பதை கடந்த காலத்திலும் உணரமுடிந்தது என்று ரோஹன தெரிவித்துள்ளார்.
வடக்கில் 70 வீதமான வாக்காளர்கள் அடையாள அட்டைகள் இன்றி உள்ளனர். எனவே அவர்கள் வாக்களிப்பதில் பாரிய சிரமங்கள் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட 15 பேர் நள்ளிரவில் விடுதலை
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:55.42 AM GMT ]
முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழ் உறவுகளை நினைவுகூரும் முகமாக மன்னார் பெரியகடை பொதுமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி கூட்ட நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட 9 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன் போது செய்தி சேகரிக்கச் சென்ற மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் ஜோசப் பெணாண்டோவும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வந்த நிலையில் அங்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் கைது குறித்து பொலிஸாரிடம் கேட்டார்.
சட்டவிரோதமான முறையில் கூட்டம் நடத்தப்பட்டமை, தமிழின படுகொலை என எழுதப்பட்ட பெனர் கூட்டத்தில் வைக்கப்பட்டமை, மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் போட்டோ பிரதி வைத்திருந்தமை தொடர்பான குற்றத்திற்காகவே தாம் அவர்களை கைது செய்துள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்கம் தெரிவித்திருந்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உற்படுத்தப்பட்டு வந்த நிலையில் அவர்களில் 6 பெண்களையும் நேற்று (18) இரவு 7 மணியளவில் விடுதலை செய்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் ஊடகவியலாளர் ஜோசப் பெர்ணாண்டோ உற்பட 9 பேர் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உற்படுத்தப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் 9 பேரும் மன்னார் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டனர்.
இரவு 9 மணியளவில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் புலனாய்வுத்துரையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உற்படுத்தப்பட்டருந்தனர்.
இந்நிலையில் நேற்று (18) சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் குறித்த 9 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்க தெரிவித்தார்.
http://www.tamilwin.net/show-RUmryFSdNbhpy.html
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
த.தே.ம முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் கைது!- புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைப்பு
[ சனிக்கிழமை, 18 மே 2013, 11:55.41 AM GMT ]
இவர்கள் இன்று மாலை 4.00 மணியளவில் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தற்சமயம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் இறந்த தமிழ் மக்களை நினைவுகூர்ந்து மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற வேளை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
த.தே.ம முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன்- மன்னார் பிராந்திய ஊடயவியலாளர் ஒருவர் கைது- புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைப்பு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் அரச ஊடகவியலாளர் உற்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 6 பேர் தற்போது விடுதலை செய்துள்ளனர்.
இன்று மாலை 4.00 மணியளவில் மன்னார் பொலிஸாரினால் 6 பெண்கள் உற்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உற்படுத்தப்பட்டு வந்த நிலையில் அவர்களில் 6 பெண்களை மன்னார் பொலிஸார் விடுதலை செய்தனர்.
கஜேந்திரன், விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் அரச ஊடகவியலாளர் ஜோசப் பெர்ணாண்டோ உற்பட 9 பேர் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருவருகின்றனர்.
தற்போது குறித்த 9 பேரூம் மன்னார் வைத்தியசாலைக்கு அழைத்துச செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் இறந்த தமிழ் மக்களை நினைவுகூர்ந்து மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை மன்னார் பொலிஸார் பலவந்தப்படுத்தி ஏற்றிச்சென்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது குறித்த 9 பேரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதே சமயம் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு குறித்த கைதுகள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் தலைமையிலான ஊடகவியலாளர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் காவல் கடமையில் இருந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டு பலவந்தமாக பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten