[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:48.36 AM GMT ]
ஆளும் கட்சியின் தேர்தல் பொறுப்புக்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களை வழிநடாத்தும் பிரதான பொறுப்பு அமைச்சர் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் பசில் ராஜபக்ச கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டிருந்த பல பொறுப்புக்கள், பசில் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் கட்சிக்குள் உள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டள்ளதாகத் தெரியவருகிறது. இதன்படி எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள சகல தேர்தல் நடவடிக்கைகளையும் பெசில் ராஜபக்ச வழிநடாத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
இனப்பிரச்சினை தீர்வுக்கான குழுவிடம் இணக்கம் இல்லை!- பா.உ சுமந்திரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:42.42 AM GMT ]
இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இணக்கம் ஒன்றை எட்டும் முகமாக தமிழ்க் கட்சிகள் மத்தியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றி பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பின் ஆங்கில பத்திரிகை ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கோடிட்டு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார், சிரேஸ்ட சட்டத்தரணி புவிதரன், சட்டத்துறை விரிவுரையாளர் குமரகுருபரன் ஆகியோரைக் கொண்ட குழு கடந்த வார இறுதியில் அமைக்கப்பட்டது.
எனினும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த நிபந்தனை காரணமாக இந்தக் குழுவினால் இணக்கம் ஒன்றை எட்டமுடியவில்லை என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே சுமந்திரனால் இந்தக்குழுவுக்கு முன்னால் முன்வைக்கப்பட்ட சில யோசனைகள் கஜேந்திரகுமார் மற்றும் ஏனையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
எனினும் எதிர்வரும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து சுயாதீனக் குழுவாக போட்டியிட வேண்டும் என்று கஜேந்திரகுமார் நிபந்தனை விதித்தார்.
இந்தநிலையில் குறித்த நிபந்தனையானது இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு உதவும் என்று தாம் நம்பவில்லை என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் மீண்டும் இந்தக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதி தமிழ்க் கட்சிகள் வவுனியாவில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten