தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 mei 2013

லண்டனில் வாடிக்கையாளர்களிடம் பணத்தினை திருடும் தமிழர் கடைகள்


லண்டனில் வாடிக்கையாளர்களிடம் பணத்தினை திருடும் தமிழர் கடைகள்

பிரித்தானியாவில் உள்ள தமிழர் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களிடம் அவர்களுக்கு தெரியாமல் கள்ள கணக்கு போட்டு பணத்தினை சூறையாடி வருகின்றனர்
தமிழர் கடை தானே என எண்ணி அங்கு செல்லும் தமிழ் மக்கள் .இந்தியா இலங்கை பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்
அவ்வேளை அவர்கள் வாங்கும் பொருட்களின் போது அவர்களுக்கு பேச்சு கொடுத்தவாறு மேலதிகமாக சில பவுண்டுகளை அறவிடுகின்றனர்
அவ்விதம் அறவிடும் அவர்கள் அதற்கான பற்று சீட்டினை வழங்குவதில்லை
இதை அறிந்த மக்கள் சிலர் ரசீது கேட்டு வாங்கிய பொருட்களை சோதனை செய்த போதே இந்த மோசடிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன
மேலதிகமாக உள்ள விலையினை இது எதற்கான விலை என கேட்க்கும் பொழுது தெரியாதது போல் பார்த்துவிட்டு தவறுதலாக அடிபட்டு விட்டது என கூறி அந்த பணத்தினை வழங்கிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன
தயவு செய்து பிரிட்டன் .பிரான்ஸ் .கனடா சுவிஸ் ஜேர்மன் போன்ற நாடுகளில் தமிழர் கடைகளுக்கு செல்லும் மக்கள் நீங்கள் வாங்கிய பொருட்களை சரிபார்த்து அதன் விலையினை அறிந்து செல்லுங்கள்
மறக்காமல் உங்கள் ரசீதுகளை வாங்கி செல்லுங்கள் அவ்விதம் இடம்பெற்றால் உடனடியாக பொலிசாரை அழைத்து குறித்த விடயம் தொடர்பாக தெரிவிக்கும் பொழுது நுகர்வோர் அமைச்சினால் இவர்களின் கடை அனுமதி பத்திரம் ரத்து செய்ய பட்டு குறித்த கடைக்கு மூடுவிழா நடத்த படும்
குறித்த விலைக்கு மேலதிகமாக  உங்களிடம் பணம் பெற்றாலோ அல்லது கள்ள கணக்கு போட்டாலோ அது குற்றமாகும்
இவர்கள் உரிய முறையில் ரசீது வழங்க வேண்டும் இதனை இந்த வணிக நிருவனம்கள் உரிய முறைப்படி வழங்குவதில்லை எனவே தமிழ் மக்களே உசாரகுங்கள் உங்கள் பணத்தினை தேவையற்று இவர்களிடம் இழக்காதீர்கள்

Geen opmerkingen:

Een reactie posten