கூட்டமைப்பி;ன் உள் முரண்பாடுகளை நீக்கும் வகையினில் அனைத்து தரப்புக்களையும் உள்ளடக்கிய உயர் மத்திய குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. 25 பிரதிநிதிகளை கொண்ட இக்குழுவினில் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு 12 ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளது.மற்றும் டெலோ ஈபி ஆர்எல்எவ் தரப்புகளுக்கு தலா நான்கு ஆசனங்களும் கூட்டணி மற்றும் புளொட் அமைப்புக்களுக்கு தலா இரு ஆசனங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. உதிரியாகவுள்ள ஒரு ஆசனத்தை தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய நான்கு கட்சிகளும் இணைந்து பேசி முடிவெடுத்துக்கொள்ளலாமென அறியத்தரப்பட்டுள்ளது.
ஓவ்வொரு கட்சிகளும் தத்தமது நாடாளுமன்ற அங்கத்தவர்களுடன் ஏனைய முக்கிய பிரதிநிதிகளை குழுக்களினில் இணைத்துக்கொள்ளவுள்ளன.தமிழரசுக்கட்சி அம்பாறைஇ வன்னி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு தலா ஒரு பிரதிநிதியையும் ஏனைய ஒன்பது இடங்களுக்கு தமது நாடாளுமன்ற அங்கத்தவர்களை கொண்டு நிரப்பவுள்ளதாகவும் தெரியவருகின்றது.எனினும் புளொட் அமைப்பு தமக்கான இரு ஆசனங்கள் போதாதென கருத்து தெரிவித்துள்ளது.
ஏற்கனவே எடுக்கப்பட்ட இம்முடிவு தொடர்பாக நேற்றைய மன்னார் ஆயருடனான சந்திப்பின் பின்னர் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இம்முடிவு கட்சிகளிடையே முரண்பாடான நிலையினை நீக்கி விடுமென எதிர்பார்க்கப்படுகின்ற போதும் வழமை போன்றே தமிழரசு கட்சியின் ஒருபிரிவு இதற்கெதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதுடன் மத்திய குழுவை கூட்டவும் கோரியுள்ளதாக உள்ளக தகவல்கள்
Geen opmerkingen:
Een reactie posten