தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 mei 2013

தேசிய தலைவரின் நண்பரை சிறைப்பிடித்துள்ள ஸ்ரீலங்கா !


விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பாளர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு நீதிமன்றத்தில் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஒன்றாக கல்விக்கற்றவர் என்று கூறப்படும் வல்வெட்டித்துறையை சேர்ந்த ஞானசுந்தரம் ஜெயசுந்தரம் என்பவரே இந்த தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
2007 ஆம் ஆண்டு இவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டார். விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவுடன் இயங்கி வந்த இவர் விடுதலைப் புலிகளுக்காக கப்பல் ஒன்றை கொள்வனவு செய்தததாகவும் ஆயுத கொள்வனவில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் தாம் தமது குற்றத்தை ஏற்பதாக கூறிய ஞானசுந்தரம், தமக்கு புனர்வாழ்வு வேண்டும் என்றும் சமூகத்துடன் மீண்டு;ம் இணைய வேண்டும் என்றும் கோரியுள்ளார். என சிங்களப் பத்திரிகை கூறியுள்ளது

Geen opmerkingen:

Een reactie posten