தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 18 mei 2013

புலித் தலைவர்களுக்கு சலுகை வழங்கும் அரசாங்கம் கடைநிலைப் போராளிகளை தண்டிக்கின்றது - ஜே.வி.பி.


பௌத்தசாசன, கலாச்சார அமைச்சர்கள் விசரர்களைப் போன்று செயற்படுகின்றனர் – பொதுபல சேனா
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:09.51 AM GMT ]
 பௌத்தசாசன மற்றும் கலாச்சார அமைச்சர்கள் விசரர்களைப் போன்று செயற்பட்டு வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

 வெசாக் பண்டியையை, கிறிஸ்தவர்களின் கரோல் நிகழ்வாக மாற்றமடைந்துள்ளது.
 சீனர்களின் சகல குப்பைகளும் தற்போது சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
 சீனாவின் காலணியாக இலங்கை மாற்றமடைந்து செல்கின்றது.
 வெசாக் நிகழ்வை நாடகமாக கூத்தாக கொண்டாடும் கடைசி ஆண்டாக இது இருக்க வேண்டும்.
 சில தரப்பினர் வெசாக் நிகழ்வை தங்களது வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொள்கின்றனர்.
 ஊடகங்கள் பௌத்த பிக்குகளை நடிகர்களாகப் பயன்படுத்திக் கொண்டு வர்த்தக விளம்பரங்களை செய்கின்றன.
 இன்று பெரும்பான்மையினம் சிறுபான்மையினத்தின் கட்டளைகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
 சுதந்திரத்தின் பின்னர் நாட்டை ஆட்சி செய்த சகல அரசாங்கங்களும் இதற்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
புலித் தலைவர்களுக்கு சலுகை வழங்கும் அரசாங்கம் கடைநிலைப் போராளிகளை தண்டிக்கின்றது - ஜே.வி.பி.
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:12.30 AM GMT ]
தயா மாஸ்ட்டரால் உறுதிப்படுத்தப்பட்ட அடையாள அட்டையை வைத்திருந்தவர் சிறையில் உள்ள அதே நேரம், தயா மாஸ்ட்டர் சுதந்திரமாக வாழ்வதாக ஜே வி பி குற்றம் சுமத்தியுள்ளது.
ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தமக்கு வெலிக்கடை சிறைக்கு விஜயம் செய்ய கிடைத்ததாகவும், இதன் போது சந்தித்த தமிழ் கைதி ஒருவர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அடையாள அட்டையை கொண்டிருந்தமைக்காக கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அவரது அடையாள அட்டை விடுதலைப் புலிகளின் பேச்சாளராக இருந்த தயா மாஸ்ட்டரினால் கைச்சாத்திடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் அதனை வைத்திருந்தவர் சிறையிலும், அதனை உறுதிப்படுத்திய தலைவர் வெளியிலும் இருப்பதுதான் இலங்கையின் ஜனநாயகம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten