[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:13.04 AM GMT ]
2011ம் ஆண்டு மூன்றாவது முறையாக கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு, நான்காவது வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி அவர்கள் நான்காவது தடவையும் மீண்டும் உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்து, பல்கலைக்கழகத்துக்கு தெரிவாக முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளார்.
எதிர்வுரும் 20ம் திகதி வரையில் இதற்கு விண்ணப்பகிக்க முடியும். வழமையாக மூன்றாவது முறையுடன் விண்ணப்பதாரிகளின் பல்கலைக்கழக அனுமதிக்கான அவகாசம் நிறைவடையும்.
எனினும் 2011ம் ஆண்டு மூன்றாவது தடவையயாக பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு இந்த விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இடம்பெற்ற பெறுபேறுகள் தொடர்பான குழப்பநிலையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி விண்ணப்ப தாரிகள் தங்களின் விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து, பரீட்சைகள் திணைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக பிரிவிடம் கையளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
விமல் வீரவன்சவிற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:15.11 AM GMT ]
கடுவல நகரசபையின் தலைவரே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளார்.
ஆயிரக் கணக்கான ஆதரவாளர்களுடன் இந்தப் போராட்டத்தை நடாத்த உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2011ம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது விமல் வீரவன்ச, தமக்கும் தமது ஆதரவாளர்களுக்கும் பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்தார் என நகரசபையின் தலைவர் புத்ததாச தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் நடவடிக்கைகளுக்கு எதிராக சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்று நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten