[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 12:16.26 AM GMT ]
இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹில்டே ஹரால்ட்ஸ்டட், முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜோனாஸ் கார் ஸ்ரோர் உள்ளிட்ட 11 நோர்வே அதிகாரிகளுக்கு எதிராக, 98 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி கலாநிதி குமார் ரூபசிங்க சமர்ப்பித்துள்ள வழக்கின் மீதான விசாரணையின் போதே, கொழும்பு மாவட்ட நீதிபதி அமலி ரணவீர இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்களுக்கு 2008ல் குமார் ரூபசிங்கவின் நிறுவனத்துடன் நோர்வே மற்றும் பிரித்தானிய தூதரகங்களின் சார்பில் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது.
2008 தொடக்கம் 2011ம் ஆண்டு வரை அமைதியை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கு இந்த உடன்பாடு செய்யப்பட்டது. எனினும் 2009ல் இந்த உடன்பாட்டை நோர்வே அரசாங்கம் முறித்துக் கொண்டது.
இதற்கு எதிராகவும், தனக்கு வழங்கப்பட வேண்டிய 98,528,065 ரூபா கொடுப்பனவை வழங்க உத்தரவிடக் கோரியும் குமார் ரூபசிங்க வழக்குப் பதிவு செய்திருந்தார்.
எனினும், 1961ம் ஆண்டு வியன்னா உடன்பாட்டுக்கு அமைய, இராஜதந்திர விலக்குரிமை தமக்கு உள்ளதாகவும், தமக்கு எதிராக இலங்கையில் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்றும் நோர்வே தூதுவர் மற்றும் நோர்வே அதிகாரிகள் சார்பில் பதில் மனு சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த மனுவையே கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளதுடன், நோர்வே தூதுவருக்கு இராஜதந்திர விலக்குரிமை இருந்தாலும் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
கொழும்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவு கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ப்பாட்டங்கள், அழுத்தங்கள் மூலம் அரசை வீழ்த்த முடியாது! நிமல் சிறிபால டி சில்வா
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 12:41.35 AM GMT ]
பெரிதாக எதையோ சாதிக்கப் போவதாக எண்ணி 15ம் திகதி எதிர்க்கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் தோல்வியில் முடிந்தது போலவே 21ம் திகதிய எதிர்ப்பு நடவடிக்கைகளும் புஷ்வாணமாவது உறுதியெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மின் கட்டண உயர்வு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 21ம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்வதற்கு எதிர்க் கட்சிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அடுத்தடுத்த தோல்வியைச் சந்தித்துள்ள எதிர்க்கட்சியினர் எதையாவது செய்து அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு முயற்சிக்கின்றனர். இது அவர்களது பகல் கனவாகும்.
அவர்களது எந்த ஆர்ப்பாட்டமும் அழுத்தங்களும் அரசாங்கத்தை கவிழ்க்கவோ பலவீனப்படுத்தவோ முடியாது.
ஏனெனில் மக்கள் பலத்தில் கட்டியெழுப்பியுள்ள அரசாங்கம் மிகுந்த பலமுள்ளதாக உள்ளதென்பதை அவர்கள் உணர வேண்டும்.
பல்வேறு காரணங்களைக் காட்டி மக்களை திசைதிருப்பலாம் என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் 15 ம் திகதி கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டம் தோல்வியில் முடிந்தது.
அதைப்போன்றே 21ம் திகதி அவர்கள் எத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைகளை அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொண்டாலும் அது தோல்வியிலேயே முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten