13 வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 58 வயதான பிக்கு ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கெப்பத்திகொல்லாவ பகுதியிலுள்ள விஹாரையொன்றின் தேரரே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவன் மதவழிபாட்டிற்காக விஹாரைக்கு சமூகமளித்த சந்தர்ப்பத்தில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுவனின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து, சம்பந்தப்பட்ட பிக்கு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.
தமிழகத்தில் தடையை மீறி தமிழீழ தேசிய கொடியுடன் அணி திரட்ட மாணவர்கள் கைது
MAY 18, 2013 COMMENTS OFF
முள்ளிவாய்க்காலின் பேரவலத்தை உலகம் பூராகவும் உள்ள தமிழர்கள் வலியுடன் அனுஷ்டித்து வருகின்றனர்.
அதற்கு அமைவாக இன்று தமிழகத்திலும் மாணவர் படை மீண்டும் கிளர்ந்தெழுந்துள்ளது.
தமிழீழ தேசிய கொடியுடன் சென்னை மெரினா கடகரையில் மாணவர்கள் திரட்டனர்.
ஐ.நா. மன்றம் உடனடியாக ஈழத் தமிழர்கள் வாழும் பகுதியில் பொது வாக்கெடுப்பு (Referendum) நடத்த வேண்டும்.
தனித்தமிழீழம் அமையும் வரை மாணவர் போராட்டம் ஓயாது என்ற கோஷங்களுடன் மாணவர்கள் ஒன்றுகூடினர்.
தேசியக் கொடியுடன் பேரணியாக செல்ல முனைந்த மாணவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
இதன்போது தமிழீழ தேசிய கொடியுடன் பேரணி நடத்திய தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு மாணவர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten