தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 mei 2013

புலிகளுக்கு ஆயுதங்களையும் கப்பல்களையும் கொள்வனவு செய்தேன்! - தலைவரின் நண்பன் நீதிமன்றில் வாக்குமூலம்!!


‘மகாசென்’ புயல்!- இலங்கைக்கு இன்னும் அச்சுறுத்தல்! வடக்கு, கிழக்கில் தாழமுக்கம்! மட்டக்களப்பில் மினி சூறாவளி
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:40.24 AM GMT ]
வங்காள விரிகுடாவின் தென்மேற்கே உருவாகியுள்ள மகாசென் என்ற புயல் சின்னமானது இலங்கைக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே உள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் சின்னமானது முல்லைத்தீவில் இருந்து 600 கிலோமீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது இலங்கையின் வடமேல் திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் இலங்கையின் காலநிலையிலும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டொரு நாட்களில் இந்த புயல் இலங்கையின் வடபகுதியை தாக்கும் வாய்ப்பும் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
அத்துடன் கிழக்கு கடற்பகுதியில் மீன்பிடிக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு கடலில் தாழமுக்கம்: மட்டக்களப்பில் மினி சூறாவளி
முல்லைத்தீவுக்குக் கிழக்காக 700 கிலோ மீற்றர்கள் தூரத்தில் காணப்படும் ‘மகாசென்’ தாழமுக்கம் மேலும் தீவிரமடையக் கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் தற்போது மணித்தியாலத்திற்கு 10-20 கிலோ மீற்றர்கள் வேகத்தில் வடமேற்காக நகர்ந்து கொண்டிருக்கும் இத்தாழமுக்கம் வடகிழக்காகி பங்களாதேஷையோ அல்லது மியன்மாரையோ ஊடறுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் கிழக்கு கடலில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
இத்தாழமுக்கத்தினால் இலங்கைக்குப் பாதிப்பு ஏற்படாது. என்றாலும், அடிக்கடி காற்றின் வேகம் அதிகரிக்கும்.

மேல், சப்ரகமுவ, மத்தி ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும், என்றாலும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மாலை வேளையில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை இன்று அதிகாலை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் மினி சூறாவளி வீசியுள்ளது. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கான முன் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3.00 மணியளவில் ஆரம்பித்த இடி, மின்னல், மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை அம் மாவட்டத்தில் தற்போதும் தொடர்கிறது.
யாழ்ப்பாணத்திலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழை இன்று காலை முதல் தொடர்ந்து பெய்து வருகிறது.
“மகாசென்“ புயல்- பௌத்த அமைப்புக்கள் கண்டனம்
இலங்கையின் மேற்கு கடற்பிராந்தியத்தில் தற்போது நிலவும் புயல் சின்னத்துக்கு மகாசென் என்று பெயரிடப்பட்டுள்ளமைக்கு பௌத்த அமைப்புக்கள் கண்டனம்
வெளியிட்டுள்ளன.
மகாசென் என்ற அனுராதபுர ராஜதானியை ஆண்ட மன்னனின் பெயரை இந்த புயல் சின்னத்துக்கு வைத்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்று வடக்கின் பௌத்த தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மகாசென், ஒருபோதும் புயல் போன்று செயற்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனையடுத்து இலங்கை வானிலை அவதான மையம் மகாசென் புயலின் பெயரை மாற்றியமைக்குமாறு புதுடில்லியில் உள்ள தென்னாசிய வானிலை மையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வானிலை அவதான மைய பணிப்பாளர் எஸ்.எச்.காரியவசம் தெரிவித்துள்ளார்.
புலிகளுக்கு ஆயுதங்களையும் கப்பல்களையும் கொள்வனவு செய்தேன்! - தலைவரின் நண்பன் நீதிமன்றில் வாக்குமூலம்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 09:58.30 PM GMT ]
2007ம் ஆண்டு செப்ரெம்பர் 5இல் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நெருங்கிய தோழரான குணசுந்தரம் ஜெயசுந்தரம் தலைவரின் செயற்பாடுகள் குறித்து விசனம் தெரிவித்துள்ளார்.
2013 மே 10 ஆம் திகதி கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்ததையும் கப்பல்களைக் கொள்வனவு செய்ததையும் குணசுந்தரம் ஏற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரபாகரனுடன் தான் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்ததாகவும் பயங்கரவாத செயற்பாடுகளைத் தீவிரமாக ஆதரித்ததாகவும் குணசுந்தரம் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் கடற்புலித் தலைவர் சூசை, அரசியல் தலைவர் தமிழ்ச்செல்வன், பொலிஸ் பொறுப்பாளர் நடேசன், சர்வதேச தலைவர் கஸ்ட்ரோ ஆகியோரைத் தான் சந்தித்ததாகவும் குணசுந்தரம் கூறினார்.
கரன் என்ற ஒருவரை தான் சந்தித்ததையும் குணசுந்தரம் ஏற்றுக்கொண்டார்.
இவர் லண்டனில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவர். கடல் ஊடாக ஆயுதங்களை ஏற்றிச் செல்ல தமக்குச் சொந்தமான கப்பல்களையும் இவர் பயன்படுத்தி உள்ளார். ஜயா பெக், ஹெரி மேர்சன்ட் என்ற பெயரிலான இரு கம்பனிகளை சிங்கப்பூரில் உருவாக்க நடவடிக்கை எடுத்து சுவிட்சர்லாந்திலும், கனடாவிலும் இருந்து நிதிகளை பெற்றார்.  விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை பெறுவதற்காக கப்பல் ஒன்றையும் இவர் கொள்வனவு செய்துள்ளார்.
தாம் எல்.ரீ.ரீ.ஈ.யின் ஆக்கிரமிப்பும், வன்முறைகளும் கொண்ட செயற்பாடுகளைக் கண்டிப்பதாகவும் அவர் நீதிமன்ற வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். ்
வெளிநாடுகளில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ. குழுக்களால் அமெரிக்காவிலுள்ள ருத்தரகுமாரன், பிரிட்டனில் உள்ள எஸ். ஜே. எமானுவேல் அடிகளார், நோர்வேயில் உள்ள பேரின்பநாயகம் சிவபரன் என்று அழைக்கப்படும் நெடியவன் ஆகியோரால் இலங்கையில் வசிக்கும் தமிழ் சமூகத்தவர்களுக்கு அதிக ஆபத்துகளை ஏற்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் புனர்வாழ்வுத் திட்டங்களை பின்பற்ற தாம் ஆவல் பூண்டுள்ளதாகவும் குணசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் மே 16ம் திகதிக்கு ஒத்தி வைத்ததுள்ளது.
இவ்வாறு இலங்கையில் இருந்து வெளிவரும் தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten