தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 mei 2013

மட்டு. கரடியனாறு கொள்ளைச் சம்பவத்தில் தேடப்பட்ட 5 சந்தேக நபர்கள் கைது!


இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! 24 பேர் படுகாயம்: யாழில் சம்பவம்
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 07:56.47 AM GMT ]
யாழ்ப்பாணம் கைதடி பாலத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர் படுகாயமடைந்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று முற்பகல் 11 மணியளவில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த பேருந்தும் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சாவகச்சேரி பொலிஸார் குறிப்பிட்டனர்.
மட்டு. கரடியனாறு கொள்ளைச் சம்பவத்தில் தேடப்பட்ட 5 சந்தேக நபர்கள் கைது
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 07:19.13 AM GMT ]
மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவமொன்றில்  தேடப்பட்டு வந்த ஐந்து சந்தேக நபர்களை நேற்று மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கடந்த வருடம் 2012.10.05ம் திகதி கித்துள்வௌ நாகதம்பிரான் ஆலயத்திற்கு பூசை வழிபாட்டிற்காக சென்றிருந்த பெண்ணெருவரின் மூன்று இலட்சத்து 19 ஆயிரம் பெறுமதி வாய்ந்த தங்கத் தாலியை திருடர்கள் அபகரித்து சென்றிருந்ததாக கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் நேற்று மாலை அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஐந்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இதேவேளை மேற்படி பொருளை கொள்வனவு செய்த வர்த்தகரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டு அவர்களிடமிருந்து உருக்கிய நிலையில் பொருள் மீடக்கப்பட்டது.
சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருள் போன்றவற்றை இன்று  ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten