தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 mei 2013

மட்டு.திராய்மடு காட்டுப்பகுதியில் சட்ட விரோத ஆயுதங்கள் மீட்பு!


துப்பாக்கிகளுடன் கெப் வாகனம் மீட்பு - காவலாளி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 12:03.20 PM GMT ]
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் இருந்த கெப் வாகனம் ஒன்றை பண்டாரவளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பண்டாரவளை - பூணாகலை தேயிலை தோட்டத்திற்கு அருகில் இருந்து இந்த கெப் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நேற்று இரவு பூணாகலை வீதியில் கடமையில் இருந்த பொலிஸார் அங்கு பயணித்த கெப் வாகனமொன்றை நிறுத்தியுள்ளனர்.

எனினும் பொலிஸாரின் சமிக்ஙையை மதிக்காது கெப் வாகனம் சென்றதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கெப் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கெப் வாகனத்தில் இருந்த ஆவணங்களை வைத்து சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.


காவலாளி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!

புத்தல - பெலவத்த சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான வீடமைப்புத் திட்டத்தின் 10ம் இலக்க பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (12) பகல் 01.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சடலத்தை மீட்டு புத்தல பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

பெலவத்த சீனி தொழிற்சாலை வளவில் காட்டு யானை பாதுகாப்பு பகுதியில் காவலாளியாக பணிபுரிந்துவந்த 35 வயதுடைய நிரோஷன் விஜேரத்ன என்பரே உயிரிழந்துள்ளார்.

இவர் வைத்திருந்த துப்பாக்கி வெடித்தே இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடவத்தையில் நபரொருவர் வெட்டிக் கொலை

கடவத்தை - சூரியகம தேவாலய வீதி சந்தியில் நபரொருவர் இனந்தெரியாதோரால் நேற்றிரவு 8.30 அளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரத்தம் தோய்ந்த வெட்டுக் காயங்களுடன் வீதியில் கிடந்த நபரை பிரதேச மக்கள் ராகம வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளார்.

மஹர நுகேகொட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சாந்த என்பரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலையுடன் தொடர்புடைய மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கடவத்த பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவருக்கும் சந்தேகநபர்களுக்கும் இடையில் நீண்ட கால பகை காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கடவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டு.திராய்மடு காட்டுப்பகுதியில் சட்ட விரோத ஆயுதங்கள் மீட்பு!
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 12:27.48 PM GMT ]
மட்டு.திராய்மடு சுவிஸ் கிராமம் எப்.வலய காட்டுப்பகுதியில் வெட்டிய பனைமரத்தின் நடுவில் பாதுகாப்பான கறுப்பு பொலித்தீன் மற்றும் முள்ளு கம்பிகளினால் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஜேர்மன் தாயரிப்பிலான புதிய இரண்டு கை குண்டுகளும், ரீ 56 ரக 60 தோட்டாவும், 2 மெகசினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரீசோதகரும், புலானய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியுமான என்.எம்.றஹீம் தெரிவித்தார்.

சுவிஸ் கிராமம் எப்.வலய காட்டுப்பகுதியில் விறகு வெட்டும் ஒருவர் மட்டக்களப்பு பொலிஸ் புலானய்வு பிரிவுக்கு வழங்கிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு பொலிஸ் புலானய்வு பிரிவு பொறுப்பதிகாரி என்.எம்.றஹீம் தலைமையிலான பொலிஸார் குறித்த சட்ட விரோத ஆயுதங்களை கைப்பற்றி அதனை மீட்டுள்ளனர்.

சட்ட விரோதமாக கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் தற்போது மட்டக்களப்பு மாவட்ட தலைமையக பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதனை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவித்த மட்டக்களப்பு பொலிஸ் புலானய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி என்.எம்.றஹீம் சுவிஸ் கிராமம் எப்.வலய காட்டுப்பகுதியில் இருந்த ஒருவர் இந்த சட்ட விரோத ஆயுதங்களை வைத்திருந்திருக்கலாம் எனவும் பொலிசாரின் பரீசோதனையின் பயத்தால் மறைத்து வைத்திருக்கலாம் எனவும் சந்தேகிப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten