[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 04:07.27 AM GMT ]
தற்போதும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மட்டுப்படுத்தப்பட்ட வகையிலேயே இடம்பெறுவதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளவருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா, அரசாங்கம் விடுத்த கோரிக்கை அமைய இன்னும் மசகு எண்ணெய் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் எதிர்வரும் 16ம் திகதிக்கு முன்னர் மசகு எண்ணெய் கிடைக்காத பட்சத்தில், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திரிப்பு நிலையத்தின் பணிகள் முற்றாக இடைநிறுத்தப்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அதிகாரிகள் உரிய நேரத்தில் மசகு எண்ணெயை பெற்றுக் கொள்ள தவறியமையே இதற்கான காரணம் என்றும் தொழிற்சங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதிக்கு, இலங்கை ஜனாதிபதி வாழ்த்து
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 05:08.11 AM GMT ]
பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற நவாஸ் ஷெரிப்புக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தொலைபேசி மூலமாக வாழ்த்துத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten