[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 04:02.26 AM GMT ]
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் 54 நாடுகளும் கலந்துக் கொள்ளும் என்று இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு வார காலப் பகுதியில் இந்த மாநாட்டுக்கான அழைப்பிதழ்களை அனைத்து நாடுகளுக்கும் அனுப்பி வைக்கவிருப்பதாக, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராக எதிர்வரும் 15ம் மற்றும் 21ம் திகதிகளில் நடைபெறவுள்ள எதிர்ப்பார்ப்பட்டம் மற்றும் பேரணிகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு கோரப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் அனைத்து நாடுகளும் கலந்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த மாநாட்டை புறக்கணிக்க விருப்பதாக கனடா அறிவித்து வரும் நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கருணாதிலக அமுனுகம, கனடாவின் தலைவர்கள் இதில் கலந்துக் கொள்ளாவிட்டாலும் அதன் பிரதிநிதிகள் குழு ஒன்றேனும் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டுக்கு எதிர்ப்பில்லை!- ஐதேக
இலங்கையில் நடைபெறவுள்ள பொது நலவாய நாடுகளின் மாநாட்டுக்கு ஐக்கிய தேசிய கட்சி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தாது என்று தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் நேற்றைய தினம் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை காரணம் காட்டி அரசாங்கம் தேவையற்ற செலவினங்களை மேற்கொள்ள கூடாது என்றும் இதன் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேவேளை கட்சியின் இலக்குகளை சரியான முறையில் ஈடு செய்யாத தொகுதி அமைப்பாளர்கள் ஐந்து பேர் பதவி நீக்கம் செய்யப்படவிருப்பதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹாலிஹெல, ஹப்புத்தளை, பிபிலை உள்ளிட்ட 5 பேரை பதவி நீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 03:38.03 AM GMT ]
இது தொடர்பில் நேற்றைய தினம் கட்சியின் தலைமையகமான தாருசலாமில், அமைச்சர் ரவுப் ஹக்கீம், பொது செயலாளர் ஹசன் அலி உள்ளிட்டத்தரப்பினரை, தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால் இந்த போராட்டங்களுக்கு ஆதரவளிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten