தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 mei 2013

புலிகள் இயக்கத்தின் யாழ்.மாவட்ட அமைப்பாளர்கள் எனக் கூறி கப்பம் பெற முயன்ற குழுவினரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளனர்


இராணுவத்தினரின் காணி அபகரிப்பிற்கு எதிராக போராடத் தயார்!- வலி. தென்மேற்கு பிரதேச சபை
[ சனிக்கிழமை, 04 மே 2013, 04:52.58 AM GMT ]
யாழ்ப்பாணம் வலி. தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் இராணுவத்தினரின் காணி ஆக்கிரமிப்பு மற்றும் காணி அபகரிப்புகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக மேற்படி பிரதேச சபையின் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
வலி. வடக்கிலும் இதே போன்று மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினரின் நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதைப் போல வலி. தென்மேற்கு பிரதேசத்திலும் வழக்கு தொடர உள்ளதாகவும் மேற்படி சபையின் உறுப்பினர் கௌரிகாந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வலி.தென்மேற்கு பிரதேசம் உட்பட மாவட்டம் மாகாணம் என தமிழர் தாயகப் பகுதிகளில் இராணுவத்தின் காணி மற்றும் நில ஆக்கிரமிப்புக்களும் மற்றும் அபகரிப்புககளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
இதன் தொடராக வலி. தென்மேற்குப் பகுதியிலும் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியை படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதே போன்று பொது மக்களது காணிகள் மற்றும் வீடுகளையும் அபகரித்தும் ஆக்கிரமித்தும் வைத்திருக்கின்றனர்.
இதே போன்று பொலிஸாரும் பொது மக்களது காணிகள் மற்றும் வீடுகளை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அதாவது இப்பிரதேச சபைக்குட்பட்ட இளவாலைப் பகுதியில் பத்து வீடுகளும் மானிப்பாயில் இரண்டு வீடுகளுமாக பொலிஸார் வைத்துள்ளனர்.
இவ்வாறு இராணுவமும் பொலிஸாரும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்ற அல்லது அபகரித்து வைத்திருக்கின்ற காணிகள் மற்றும் வீடுகளைத் திரும்ப வழங்க வேண்டுமென கோரி வருகின்ற நேரத்தில் அதனை நிரந்தரமாக கைப்பற்றுகின்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக மானிப்பாய் கூழாவடியில் இராணுவத்தினர் அமைத்து வைத்திருக்கின்ற முகாம் காணிகள் தனியாருக்குச் சொந்தமானவை.
இதற்கு உறுதிகளும் இருக்கின்ற நிலையில் இதனை அபகரிப்பதற்கான அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன. இவ்விடயங்கள் பிரதேச சபையின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் வலி.வடக்கிலும் மற்றும் கிழக்கிலும் இவ்வாறு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதுடன் சட்டரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் பிரதேச சைபயின் ஆறு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


புலிகள் இயக்கத்தின் யாழ்.மாவட்ட அமைப்பாளர்கள் எனக் கூறி கப்பம் பெற முயன்ற குழுவினரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளனர்
[ சனிக்கிழமை, 04 மே 2013, 04:59.46 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர்கள் எனக் கூறி கப்பம் பெற முயன்ற குழுவினரை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான குழுவினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் மேற்கொண்ட அதிர நடவடிக்கையின் போதே குறித்த இரண்டு நபர்களையும் கிளிநொச்சி பரந்தன் சந்தியில் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலுள்ள குறிப்பிட்ட ஒருவருடைய தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்ட ஒருவர், தாங்கள் விடுதலைப் புலிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் என்றும் தற்போது தமக்கு பணம் செலுத்த வேண்டுமெனவும் கடந்த சில நாட்களாக கோரியுள்ளனர்.
மேலும் தாம் கோருகின்ற பணத்தை தர மறுத்தால் தாம் என்ன செய்வோம் என்று தெரியாதென்றும் இதனை யாரிடமும் சொல்லக் கூடாதென்றும் பணத்தைக் கொண்டு கிளிநொச்சி பரந்தனுக்கு வருமாறும் அழைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான குழுவினர் அதிரடியான விசேட நடவடிக்கையை இரகசியமாக மேற்கொண்டனர். அதாவது குறித்த நபருடன் இணைந்து பரந்தனுக்கு எட்டு இலட்சம் ரூபா பணத்தைக் கொண்டு சென்று பரந்தன் சந்தியில் வைத்து பணத்தைக் கொடுப்பதற்கு முற்பட்டுள்ளனர்.
இதன் போது அங்கு பணம் பெற்றுக் கொள்வதற்காக வருகை தந்த  இருவரையும் மறைந்திருந்த பொலிஸார் கைது செய்தனர்.
இதன் போது யாழ்ப்பாணம் கோப்பாய் மற்றும் கிளிநொச்சி உருத்திரபுரம் ஆகிய பிரதேசங்களையும் சேர்ந்த இரண்டு நபர்களைக் கைது செய்துள்ளதாகவும் இவர்கள் இருவரும் யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கின்ற பொலிஸார், விசாரணைகள் முடிவடைந்ததும் நீதி மன்றில் ஆஐர்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten