[ சனிக்கிழமை, 04 மே 2013, 06:08.24 AM GMT ]
மே தின கூட்டத்தில் பேசிய அமைச்சர் விமல் வீரவன்ச தனக்கு அமைச்சுப் பதவி பெரிய விடயமல்ல எனவும் அரசாங்கம் தனது மனசாட்சிக்கு எதிராக நடக்குமாயின் தான் எந்த நேரத்திலும் பதவி துறப்பேன் எனவும் கூறியிருந்தார்.
வட,கிழக்கு தமிழர்களின் வாழ்வுரிமை மறுக்கப்படுவதன் பின்னணியிலேயே தமிழ் மக்கள் அவுஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அச்சுறுத்தல் மிகுந்த சூழ்நிலையிலும் செல்கின்றனர்.
அமைச்சர் வீரவன்ச இது போல பல அறிக்கைகளை முன்னரும் விடுத்துள்ளார். ஆனால், அவர் அவற்றை செயற்படுத்தியதில்லை. இவர் வேலை வாய்ப்புக்களை உருவாக்கப் போவதாகவும் வாழ்க்கைச் செலவை குறைக்கப் போவதாகவும் கூறி 2005இல் பதவிக்கு வந்தார்.
பான் கீ மூன் தனது நிபுணர் குழுவை கலைக்காதுவிடின் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறியவரும் இவர் தான். ஆனால், நடந்தது ஒன்றுமில்லை என ரவி கருணாநாயக்க கூறினார்.
அமைச்சர் வீரவன்ச நகைச்சுவையாக அறிக்கைகளை விடுவதில் வல்லவர். இவர் ஒருபோதும் அரசாங்கத்தை விட்டுப் போகமாட்டார். பொதுமக்களில் கவனத்தை ஈர்ப்பதற்காக பல்வேறு கூத்துக்களை காட்ட வேண்டிய தேவை அமைச்சர் வீரவன்சவுக்கு உண்டு.
இவர் கவனத்தை ஈர்ப்பதற்காக அழும் குழந்தை போன்றவர். இவர் தனது வங்குரோந்து அரசியலின் நிர்வாணத்தை மறைக்க தாய்நாடு என்ற பதத்தை பயன்படுத்துகின்றார் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
வட,கிழக்கு தமிழர்களின் வாழ்வுரிமை மறுக்கப்படுவதனாலேயே தமிழ் மக்கள் அவுஸ்திரேலியா செல்கின்றனர்
[ சனிக்கிழமை, 04 மே 2013, 06:48.14 AM GMT ]
அவுஸ்திரேலியாவுக்கு வரவேண்டாம் என பிரசாரம் செய்வதைக் காட்டிலும் தமிழர்களுக்கு அவர்களது தாயகத்தில் வாழும் உரிமையினைப் பெற்றுக் கொடுக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சர் பிறண்டன் ஓகோணர் மற்றும் கூட்டi மப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ்பிறேமச்சந்திரன், சுமந்திரன் ஆகியோருக்கிடை யிலான சந்திப்பு நேற்று காலை 10மணியளவில் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இதன்போதே மேற்படி விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கி ன்றது.குறித்த சந்திப்பு தொடர்பில் கட்சியின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்பிறேமச்சந்திரன் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர்கள் அவர்களுடைய தாயகத்தில் சுதந் திரமாகவும், பொருளாதார வளத்துடனும் வாழும் நிலை ஏற்படுத்தப்படவேண்டும். உதாரணமாக வலி,வடக்கிலிருந்து துரத்தப்பட்ட மக்கள் கடந்த 22 வருடங்கள் முகாம்களிலும், உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
படிப்படியாக தங்களுடைய வாழ்விடங்கள் விடுவிக்கப்படும், மீளவும் தங்களுடைய வாழ்விடங் களுக்குத் திரும்ப முடியும் என மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வாழ்ந்து கொண்டிருந்த நிலை யில் மக்களுடைய வாழ்விடங்களை சுவீகரிக்கப் போவதாக அரசாங்கம் நோட்டீஸ் ஒட்டுகின்றது.
நிரந்தரமான வாழ்விடம் கிடையாது. தொழில் கிடையாது. சுதந்திரமான வாழ்வுக்கான அனைத் துக் கதவுகளையும் இலங்கை அரசாங்கம் இழுத்து மூடியிருக்கின்றது.மக்கள் எங்கே போவதென்று தெரியாத நிலையில் திணறிக்கொண்டிருக்கின்றார்கள்.
இது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாமல், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் என அனைத்து மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்திலும் நடைபெறுகின்றது.
எனவே அவுஸ்திரேலியாவுக்கு மக்கள் வரவேண்டாம் என தடுப்பதற்கு முன்னால் தாயகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக, பொருளாதார வளத்துடன் வாழும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என நாம் தெரிவித்துள்ளோம்.
குறித்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் வரை இடம்பெற்றது. எமது கருத்துக்களுக்கு பதிலளித்த அமைச்சர் இலங்கை மனிதவுரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் காணவில்லை என்ற விடயத்தை நாம் இலங்கை அரசாங்கத்திற்கு கூறியிருக்கின்றோம்.
மேலும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நாம் அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கின்றோம். தாம் இந்த விடயத்தை தொடர்ந்தும் அவதானித்து வருவதாக கூறியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten