தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 mei 2013

இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 15 லட்சம் அபராதம்!- மீன்பிடித்துறை அமைச்சு


துருக்கியில் இலங்கையரொருவர் கடத்தப்பட்டார்
[ சனிக்கிழமை, 04 மே 2013, 04:28.19 AM GMT ]
துருக்கியில் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட இலங்கையர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜோர்தானிற்கு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்ற குறித்த இலங்கையர், கூடுதல் ஊதியத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அங்கிருந்து துருக்கி சென்றுள்ளார்.
இவ்வாறு துருக்கி நாட்டுக்கு சென்ற போது குறித்த இலங்கையர் கடத்தப்பட்டுள்ளார்.
கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் பங்களாதேஷ் பிரஜையொருவர் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் துருக்கி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 15 லட்சம் அபராதம்!- மீன்பிடித்துறை அமைச்சு
[ சனிக்கிழமை, 04 மே 2013, 04:35.39 AM GMT ]
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டால் 15 லட்ச ரூபா அபராதம் விதிக்கப்படும் என மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
குறிப்பாக மேற்குலக நாடுகளின் கடற் பரப்பிற்குள் பிரவேசித்து இலங்கை மீனவர்கள் மீன்பிடித்தால் 15 லட்ச ரூபா அபராதம் விதிக்கப்படும் என மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான புதிய சட்டங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு அபராதம் விதிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் இதற்காக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது.
வேறு நாட்டு கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்படும் இலங்கை மீனவர்களுக்கு இலங்கையில் பதினைந்து லட்ச ரூபா அபராதம் விதிக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.
இதேவேளை, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதனால் இலங்கை மீன் உற்பத்திகளை இறக்குமதி செய்வது தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளதாக அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten