தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 mei 2013

ஊடகவியலாளர்கள் முயற்சித்திருந்தால் பௌத்த பிக்குவை ஆபத்திலிருந்து மீட்டிருக்கலாம்: சரித ஹேரத்


யுவதியை மிரட்டி பல தடவை வல்லுறவுக்குட்படுத்திய பிரபல தயாரிப்பாளர் கைது!
[ சனிக்கிழமை, 25 மே 2013, 09:23.26 AM GMT ]
யுவதியொருவரை தொடர்ச்சியாக மிரட்டி வல்லுறவுக்குட்படுத்தி வந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரொருவரை நாரஹெம்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த யுவதி அதுருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
யுவதி சினிமாவில் நடிப்பதற்காக தயாரிப்பாளரிடம் வந்துள்ளதாகவும் அவருக்கு வாய்ப்பு தருவதாகக் கூறி அவரை நிர்வாணமாக படமெடுத்து பின்னர் அதனை வெளியிடப்போவதாக மிரட்டியே குறித்த நபர் தொடர்ச்சியாக வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் யுவதி அவரது பெற்றோருடன் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்தே பொலிஸார் தயாரிப்பாளரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் பல சிங்களத் திரைப்படங்களைத் தயாரித்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகவியலாளர்கள் முயற்சித்திருந்தால் பௌத்த பிக்குவை ஆபத்திலிருந்து மீட்டிருக்கலாம்: சரித ஹேரத்
[ சனிக்கிழமை, 25 மே 2013, 07:02.22 AM GMT ]
ஊடகவியலாளர்கள் முயற்சித்திருந்தால் பௌத்த பிக்குவை ஆபத்திலிருந்து மீட்டிருக்கலாம் என ஊடக அமைச்சின் செயலாளர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஊடக ஒழுக்க விதிகள் தொடர்பில் அனைத்து ஊடகங்களுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட வேண்டும்.
சில சம்பவங்கள் தொடர்பில் செய்தி அறிக்கை இடுவதற்கு முன்னதாக அவ்வாறான சம்பவங்களை தடுக்க முயற்சிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்ள மேற்கொண்ட முயற்சி தொடர்பில் அவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten