தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 mei 2013

13வது திருத்தம் குறித்து கருத்து கூறுவதற்கு கோத்தபாயவுக்கு அதிகாரமில்லை! அமைச்சா் வாசுதேவ - எம்.பி. சுரேஷ்


கொழும்பு துறைமுக தீ விபத்து நாசவேலையாக இருக்குமென சந்தேகம்!
[ சனிக்கிழமை, 25 மே 2013, 05:56.31 AM GMT ]
கொழும்புத் துறைமுகத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பாரிய தீவிபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
முதலாம் இலக்க கொள்கலன் முனையத்தில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் 25 கொள்கலன் ஆடைகள், இலத்திரனியல் சாதனங்களைக் கொண்ட எரிந்து நாசமாகின.
இவற்றின் பெறுமதி பல மில்லியன் ரூபாவாக இருக்கும் என்ற போதிலும் சேதங்கள் இன்னமும் முழுமையாக மதிப்பிடப்படவில்லை.
நேற்று அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட இந்த தீவிபத்தை அடுத்து, தீயணைப்புப்படையின் எட்டு வாகனங்களும், சிறிலங்கா காவல்துறை, கடற்படை, இராணுவம், விமானப்படை, ஆகியனவும் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.
இதுவே கொழும்புத் துறைமுகத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா காவல்துறையும் அரச பகுப்பாய்வுத் திணைக்களமும் தனித்தனியாக விசாரணைகளை நடத்தி வருகின்றன.
13வது திருத்தம் குறித்து கருத்து கூறுவதற்கு கோத்தபாயவுக்கு அதிகாரமில்லை! அமைச்சா் வாசுதேவ - எம்.பி. சுரேஷ்
[ சனிக்கிழமை, 25 மே 2013, 06:09.39 AM GMT ]
13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பாதுகாப்பு செயலாலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அதிகாரமோ உரிமையோ கிடையாது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவினால் முன் வைக்கப்படவுள்ள தனி நபர் பிரேரணை செல்லுபடியற்றதாகும்.
எனவே, அரசு மேற்படி பிரேரனைக்கு அங்கீகாரம் வழங்காது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பாதுகாப்பு செயலாலர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு அதிகாரமோ உரிமையோ கிடையாது.
தேசிய அரசியல் செயற்பாடுகள் குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்கும். இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டு கோத்தபாய அரசியல் பேசவேண்டும்!- சுரேஷ்
13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலோ கருத்துக் கூறுவதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அதிகாரம் இல்லை.
அவர் அரசாங்க அதிகாரியேயாவார். அரசியல் விடயங்கள் குறித்து பேச வேண்டுமானால் அவர் பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டு வரவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆங்கில ஊடகங்களுக்கு நேற்று கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் குறித்து கேட்டபோதே சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி இறுதி முடிவு
அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் மற்றும் அதில் உள்ள பொலிஸ், காணி அதிகாரங்கள் குறித்து ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு யோசனைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வருவோம்.
இறுதிவரை இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தவே எதிர்பார்க்கின்றோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்கக்கூடிய வகையில் வாக்காளர் இடாப்பு பதிவு சட்டமூலத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்து எதிர்வரும் 6ம் திகதி அதனை நிறைவேற்றவுள்ளோம்.
தமிழ்க் கூட்டமைப்பு என்னதான் எதிர்ப்புக்களை முன்வைத்தாலும் அந்த சட்டமூலம் நிறைவேற்றப்படுமென என்றும் பஷில் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten