தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 mei 2013

மதங்களுக்கிடையே பாரபட்சம் நிலவுவதாக காட்டி நாட்டை பிளவுபடுத்த சூழ்ச்சி: பிரதமர்


சைப்பிரஸ் நாட்டில் இலங்கையர் ஒருவா் கைது
[ சனிக்கிழமை, 25 மே 2013, 09:41.53 AM GMT ]
சட்டவிரோத திருமணம் ஒன்றுக்கு தயாரான இலங்கையர் ஒருவர் சைப்பிரஸ் நாட்டில் கைது செய்யப்டப்டுள்ளார். 
அவருடன் மேலும் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சைப்பிரஸ் நாட்டின் காவற்துறை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைப்பிரஸில் குடியுரிமை பெற்றுக்கொள்வதற்காக, அந்த நாட்டு குடியுரிமை கொண்டவர்களை சட்டவிரோதமான முறையில் திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்யும் வழக்கம் தொடர்ந்தும் நிலவுகிறது.
இந்த அடிப்படையில் பங்களாதேஸை சேர்ந்த ஒருவர், சைப்பிரஸ் குடியுரிமை கொண்ட தமது காதலியை, இன்னொருவருக்கு திருமணம் செய்து வைக்க முற்படும் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையில் மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
மதங்களுக்கிடையே பாரபட்சம் நிலவுவதாக காட்டி நாட்டை பிளவுபடுத்த சூழ்ச்சி: பிரதமர்
[ சனிக்கிழமை, 25 மே 2013, 10:11.50 AM GMT ]
எந்தவொரு நாடோ இனவாதிகளோ இனியும் இலங்கை நாட்டை அபகரிக்க இடமளிக்க முடியாது என பிரதமர் டி.எம். ஜயரட்ண தெரிவித்தார்.
இலங்கையில் மதங்களுக்கிடையில் பாராபட்சம் நிலவுவதாகக் காட்டி நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான சூழ்ச்சிகள் சர்வதேச நீதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதமர், இது விடயத்தில் சகலரும் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியமெனவும் கேட்டுக் கொண்டார்.
சகல மதங்களும் பராமரிக்கப்பட்டு மதத் தலங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இங்கு மதங்களுக்கிடையில் எத்தகைய ஏற்றத்தாழ்வும் கிடையாது என குறிப்பிட்ட பிரதமர் இத்தகைய சிறந்த நிர்வாகத்தைக் கொண்ட நாடு உலகில் வேறு எங்கும் கிடையாது எனவும் தெரிவித்தார்.
நாட்டின் முன்னேற்றத்துக்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் பாரிய திட்டங்களைக் கண்டு கொள்ளாது சிறு சிறு விலையேற்றங்களுக்காக ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் முன்னெடுப்பது மடமையான செயல் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
கண்டி தலதா மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten