இலங்கை மாநாடு தொடர்பில் பிரித்தானியா இன்னும் தீர்மானிக்கவில்லை! பிரதமர் கமரூன் செல்வார்! - தெ டெலிகிராப்
[ சனிக்கிழமை, 04 மே 2013, 12:28.03 AM GMT ]
அந்த நாட்டின் வெளியுறவு பேச்சாளரை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான குழுவின் புதிய தலைவராக டேவிட் டலி நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் மாநாட்டை நடத்துவது என்று 2009 ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது.
இந்தநிலையில் பொதுநலவாய நாடுகளி;ன் கூட்டுப்பொறுப்பை பிரித்தானியா மதிக்கிறது.
எனினும் இலங்கை தொடர்பில் எழுப்பப்பட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினையே தற்போது அந்தக் கூட்டுப் பொறுப்புக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அந்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பிரித்தானியாவின் எதிர்க்கட்சிகள் இலங்கை மாநாட்டில் பிரித்தானிய அரசாங்கம் பங்கேற்கக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்றன.
2ம் இணைப்பு
இலங்கையின் பொதுநலவாய மாநாட்டுக்கு கமரூன் செல்வார். மஹிந்த ராஜபக்சவை நல்வழிப்படுத்துவார்!- தெ டெலிகிராப்
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பங்கேற்பார் என்று பிரித்தானிய பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
தெ டெலிகிராப் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பல்வேறு அமைப்புகளும் நாடுகளும் குரல் எழுப்பி வருகின்றன.
எனவே இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டை பிரித்தானியா உட்பட்ட நாடுகள் புறக்கணிக்கவேண்டும் என்று கோரிக்கைகளும் வலுப்பெற்று வருகின்றன.
இந்தநிலையில் குறித்த கோரிக்கைகள் மற்றும் அழுத்தங்களை சவாலாகக்கொண்டு டேவிட் கெமரோன் இலங்கை செல்லவுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பு ஏற்கனவே எடு;த்த முடிவுக்கு மதிப்பு தந்து அந்த அமைப்பின் கொள்கைகளை வலுப்படுத்தும் முகமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் இடம்பெறும் மாநாட்டில் பங்கேற்காமல் இருப்பதன் மூலம் இலங்கையின் மனித உரிமை மீறல் சம்பவங்களை கட்டுப்படுத்தமுடியாது.
அதற்கு மாறாக இலங்கைக்கான விஜயத்தை அந்த நாட்டின் மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பில் உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ள டேவிட் கெமரோன் எண்ணியுள்ளதாக தெ டெலிகிராப் குறிப்பிட்டுள்ளது.
தமது விஜயத்தின் போது டேவிட் கெமரோன், அடக்குமுறையாளராக செயற்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை உரிய வழியில் செயற்பட வலியுறுத்துவார் என்றும் டெலிகிராப் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் புதிய பிரதிநிதி ஒருவரை நியமித்தது
[ சனிக்கிழமை, 04 மே 2013, 12:16.15 AM GMT ]
தற்போது அவர், அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தலைவராக செயற்பட்டு வருகிறார்.
முன்னதாக அவர் குரோசியாவில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பணிப்பாளராக செயற்பட்டார்.
இந்தநிலையில் டலி நேற்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து டலியின் நியமனம் தொடர்பான அறிவிப்பு இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
இலங்கை அரசாங்கம் அவரின் நியமனத்தை ஏற்றுக்கொள்ளுமாக இருந்தால், இலங்கையில் தற்போது பணியாற்றும் பேனாட் சேவேஜூக்கு பதிலாக டலி கடமைகளை பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten